’நான் பெரிய உத்தமி இல்லை’ ஜாலியாக பேசும் விக்ரம் நடிகை

நான் பெரிய உத்தமி இல்லை என விக்ரம் படத்தில் நடித்த மாயா தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2022, 02:32 PM IST
  • விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடிக்க மாயா
  • கதாப்பாத்திரம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்
  • நடிப்பது என்னுடைய வேலை என தெரிவித்துள்ளார்
’நான் பெரிய உத்தமி இல்லை’ ஜாலியாக பேசும் விக்ரம் நடிகை title=

கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் திரைப்பட உலகையே உலுக்கி உள்ளது. ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 என வேற மொழிப் படங்களை பெருசாக பேசிக்கொண்டிருந்த நிலையில் களமிறக்கப்பட்ட விக்ரம், முந்தைய வசூல்களையெல்லாம் அடித்து நொறுக்கியது. யாரும் எதிர்பார்க்காத வரவேற்பை பெற்று மக்களையும், சினிமா வட்டாரத்தையும் ஆச்சரியப்படுத்தியது விக்ரம் திரைப்படம். இதுவரை சுமார் 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்

படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளபோதும் வீக்கெண்ட்டில் இன்னும் அமோக வரவேற்பு இருப்பதாக தியேட்டர் அதிபர்களும், விநியோகிஸ்தர்களும் தெரிவிக்கின்றனர். அந்தளவுக்கு விக்ரம் படம் மக்களை ரசிக்க வைத்துள்ளது. ஒரு ரசிகராக லோகேஷ் கனகராஜ் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தப் படத்தின் மிகப்பெரிய சக்ஸஸாக பார்க்கப்படுகிறது.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான கமலின் திரைப்படம் எதிர்பார்ப்புக்கு விஞ்சிய வரவேற்பை பெற்றிருப்பதை பார்த்து தமிழ் திரையுலகம் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. அதாவது சிறந்த கதையும், நல்ல நடிகர்களும் ஒரு புள்ளியில் இணைந்து நல்ல படத்தைக் கொடுக்கும்பட்சத்தில் அதனை மக்கள் அங்கீகரிக்க தவறமாட்டார்கள் என்பதையும் உணர்த்தியுள்ளது. இதனால் இனிவரும் படங்களுக்கு பெரும் சவால் காத்திருக்கின்றன. இந்தப் படத்தில் விபச்சாரியாக நடித்த மாயாவின் கதாப்பாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும், எக்ஸ்பிரசன்ஸ் மூலம் செம ரெஸ்பான்ஸை பெற்றார். 

பேட்டி அவர் ஒன்றில் பேசும்போது, விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடித்ததில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் என்னுடைய வேலை எனத் தெரிவித்த அவர், ‘நான் பெரிய உத்தமி இல்லை’ என்றும் பொசுக்கென்று கூறியுள்ளார். நடிகை மாயாவின் இந்தப் பேட்டியைப் பார்த்த பலரும் என்ன மேடம் இப்படி ஓபனாக பேசிட்டீங்க? என வியப்புடன் கேள்வியை எழுப்பியுள்ளனர். 

மேலும் படிக்க | ’இங்க நீங்க போய்டு வாங்க’ சுற்றுலா செல்ல ஜோதிகா - சூர்யா சொல்லும் வெளிநாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News