Relationship Tips : வாழ்க்கையில் 5 விதமான நண்பர்கள் திடீரென எதிரியாக மாறுவார்கள் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்.
நண்பர்களை தேர்வு செய்வதில் உஷாராக இருந்துவிட்டால், பின் நாளில் பிரச்சனைகள் உங்களுக்கு வராது. எனவே எந்த நண்பர்களை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் துக்கத்திலும், தோல்வியிலும் உடனிருக்கும் நண்பர்களை பற்றி கேள்விபட்டிருக்கும் அதேவேளையில் துரோகம் செய்த நண்பர்களின் கதைகளும் இங்கு ஏராளம். அதனால், வாழ்க்கையில் எந்த மாதிரியான நபர்களுடன் நட்பு கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
சுயநல நண்பர்கள் எப்போதும் தங்களைப் பற்றியே சிந்திப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே உங்களிடம் வருவார்கள். அவர்கள் உங்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவே மாட்டார்கள். உங்களுக்காக உதவிக்குகூட வரமாட்டார்கள். அத்தகையவர்கள் உங்கள் உண்மையான தோழர்களாக மாற முடியாது
சிலர் மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். இப்படியான நபர்கள் எப்போதும் உங்கள் நம்பிக்கையை குறைக்க முயற்சிப்பார்கள். அவர்களுடன் பயணிப்பது உங்களுக்கு ஆபத்து.
வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை மிகவும் முக்கியமானது, ஆனால் சிலர் எப்போதும் எதிர்மறையாக நினைப்பார்கள், அப்படியே பேசுவார்கள். அவர்களின் எதிர்மறை கண்ணோட்டம் வாழ்க்கையில் நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குகளை பாதிக்கலாம்
சிலர் வதந்திகளை பரப்பி மகிழ்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நண்பர்களின் தனிப்பட்ட விஷயங்களைகூட பகிர்ந்து கொள்ள தயங்கமாட்டார்கள். அப்படியான நபர்களிடளிடமிருந்து விலகி இருப்பது நல்லது,
நட்பின் அடிப்படையிலான நம்பிக்கையை வைத்து ஏமாற்றுவதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவர்களிடம் இன்னும் உஷாராக இருக்க வேண்டும். சர்க்கரையாக பேசி ஏமாற்றுவார்கள். அதனால் அவர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் எப்போது வேண்டுமானாலும் எதிரியாக மாறுவார்கள். அதனால், அவர்களை அடையாளம் கண்டு உஷாராக இருக்கவும்.