Actress Samantha Skin Care Tips : நடிகை சமந்தா, தனது சருமத்தை பொலிவுடன் பார்த்துக்கொள்ள சில ஸ்கின் கேர் டிப்ஸ்களை பின்பற்றி வருகிறார். அவை என்னென்ன என்று பார்ப்போமா?
Actress Samantha Skin Care Tips : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் நடிகை சமந்தா. கோலிவுட் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக இருக்கும் இவர், தென்னிந்தியாவின் பணக்கார நடிகையாகவும் வலம் வருகிறார். சமந்தாவிற்கு தற்போது 37 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் தனது இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறார். இதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்ன தெரியுமா?
சமந்தா, தன் முகத்தை அனைத்து ஹீரோயின்கள் போலவும் எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்.
சமந்தாவிற்கு, சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகியிருக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். இதற்கு அவர் என்ன செய்கிறார் தெரியுமா?
சமந்தா, தனது தினசரி நடவடிக்கைகளில் தனது சருமத்திற்கு ஏற்ற டயட்டுகளை ஃபாலோ செய்கிறார். தனது சருமத்திற்கு நன்மை பயக்கும் ஜூஸ்களை குடிப்பது, ஹெல்தியான பானங்களை அருந்துவது போன்ற விஷயங்களை செய்கிறார்.
சமந்தா, கோலஜன் நிறைந்த பானங்களை அருந்துகிறார். இது குறித்து அவர் ஒரு முறை வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், காலையில் வெறும் வயிற்றில் தான் கோலஜன் நிறைந்த பானத்தை குடிப்பதாகவும் தனால் தனது ஒட்டுமொத்த சரும பராமரிப்பு மேம்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
கோலஜன் பானத்தை, தான் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதாக கூறியுள்ள சமந்தா இதனால் தன் உடல் நலனிலும் நல்ல மாறுதல்கள் தெரிவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
சமந்தா, தனது சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சிகளையும் தனது வழக்கமான பயிற்சிகளுள் சேர்த்திருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ளவும் சமந்தா தவறுவதில்லை.