Ajith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
மே 1 உழைப்பாளர்கள் தினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இதே நாள் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாள். எனவே தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகர் அஜித் குமாரின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை தன் கைவசம் வைத்துள்ள நடிகர் அஜித்தின் பிறந்தநாள் இன்று. அந்த வகையில் தற்போது அவருடைய முழுமையான சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக ரூ. 105 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இதை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித்திற்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது, அதுமட்டுமின்றி துபாயிலும் சொந்தமான சொகுசு வீடு ஒன்றை இவர் வைத்துள்ளார்.
BMW 740 Li Car ரூ. 1.5 கோடி, Land Rover Discovery ரூ. 1.30 கோடி, Ferrari 458 Italia ரூ. 4 கோடி மதிப்புள்ள கார்களை வைத்துள்ளார். மேலும் BMW R 1250 GS Adventure ரூ. 22 லட்சம் மதிப்புள்ள பைக்கை சுற்று பயணம் மேற்கொள்ள பயன்படுத்தி வருகிறாராம்.
கடந்த ஆண்டு நடிகர் அஜித் பைக் பிசினஸை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் அஜித்திற்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது, அதனுடன் பல்வேறு தொழில்களிலும் நடிகர் அஜித் முதலீடு செய்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.