நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!

ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை தெரிந்து கொண்டு பக்க விளைவுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1 /6

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் தோலில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

2 /6

ஏசி அறைகளில் நீண்ட நேரம் இருந்தால் வறண்ட காற்று உடலில் இருந்து அதிக நீர் இழப்பை ஏற்படுத்தும். இதனால் தோல் வறட்சி, சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

3 /6

ஏசியை சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் இருந்து வரும் தூசி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும். 

4 /6

ஏசியில் இருந்து வரும் வறண்ட காற்று, கண்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். 

5 /6

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பை ஏற்படுத்தும். இதனால் வலி அதிகரிக்கும். மேலும் இது மந்தமான உணர்வு மற்றும் ஆற்றல் அளவுகளை குறைக்கலாம்.

6 /6

நீண்ட நேரம் ஏசியில் இருந்து வெளியில் வந்தால் உடல் சூடு மாறி திடீர் தலைவலியைத் தூண்டும். இது பெரும்பாலும் இரத்த நாளங்களின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.