மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்!

ஜாதிக்காய் பொடியின் நன்மைகள்: சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களை தீர்க்கும் ஒரு  சஞ்சீவியாக ஜாதிக்காய் கருதப்படுகிறது. பல ஆராய்ச்சிகளில் மருத்துவ குணங்கள் அடங்கிய பொக்கிஷம் அதன் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 /6

ஜாதிக்காய் ஒரு சக்திவாய்ந்த மூலிகை, இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இதில் நீரிழிவு முதல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

2 /6

ஜாதிக்காய் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். இது கணையத்தின் வேலையை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.

3 /6

ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. டிஎன்ஏ மற்றும் செல்களை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை நீக்குகிறது. அதனால் தான் ஜாதிக்காயை உட்கொள்வதால் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

4 /6

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து  நம்மை காத்து, ஆபத்தான பாக்டீரியாக்களை அழிக்கும்.

5 /6

அதிக கொழுப்பு, அதிக ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் ஜாதிக்காய் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.   

6 /6

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும் மூலிகையாகும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தி, உங்களை மனச்சோர்விலிருந்து விலக்கி வைக்கிறது.உங்களின் சிந்தனைத் திறனையும் அதிகரிக்கிறது.