கண்களில் வீக்கம் அடைந்தது போல் சிலருக்கு இருக்கும். ஆனால், அது சில உடல்நலப் பிரச்னைகளால் வரலாம். அதனை சரியாக்க இந்த 6 விஷயங்களை கடைபிடியுங்கள்.
உப்பை குறையுங்கள்: அதிகமாக சோடியத்தை உட்கொள்வதால் திரவ தேக்கம் ஏற்பட்டு கண்களுக்கு கீழ் சதை தொங்குவது போல் இருக்கும். எனவே, அப்படி ஏற்பட்டால் உப்பை குறைத்துக்கொள்ளுங்கள்.
சன்ஸ்கிரீன்: சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்வதால் நீங்கள் அதிகம் வெளியே சென்றாலும், அந்த வீக்கத்தின் தோற்றத்தை வீகாரமாக்காமல் பாதுகாக்கும்.
தண்ணீர் குடிக்கவும்: உங்கள் உடலும், சருமம் நீரேற்றமாக இருக்க நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்தால் இந்த பிரச்னை தவிர்க்கப்படும்.
மேலும் ஒரு தலையணை: கூடுதலாக ஒரே தலையணையை வைப்பதும் அல்லது மெத்தையில் தலை வைக்கும் பகுதியை உயரமாக வைப்பதும் திரவம் தங்குதலை தடுத்து, இந்த பிரச்னையை போக்கும்.
தூக்கம் முக்கியம் அமைச்சரே: தினமும் 6-7 மணிவரை நீங்கள் தூங்கினால் இந்த பிரச்னை வரவே வராது.
வெள்ளரிக்காய்: குளிர்ச்சியான பொருள்களான வெள்ளரிக்காய் உள்ளிடவையை கண்களில் வைக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான கருத்துகளை அடிப்படையாக கொண்டது. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை நீங்கள் பெற வேண்டும். Zee News இந்த தகவலை உறுதி செய்யவில்லை.