உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக்கும் அருமையான உணவுகள். இந்த உணவுகள் அனைத்தும் உங்கள் தலை முடியை வலுவாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
அனைவரும் உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்திருந்தால் எந்தவொரு பிரச்சனையும் வராது. ஆனால் அதிகமான மக்கள் செய்யும் தவறு உணவுகள் சரியாகக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் உணவு முறையை ஒழுங்காக பின்பற்றினால்-முடி உதிர்தல் குறையும் மற்றும் தலை முடி ஆரோக்கியமாகும்.
முடி உதிர்தலை தடுத்து என்றும் வலுவாக இருக்க உங்களுக்கான சூப்பர் உணவுகள் இங்கு கொடுத்துள்ளோம்.
முட்டைகள்: முட்டை புரதம் மற்றும் பயோட்டின் சிறந்த மூலமாகும், இது முடி வலிமையைப் பலமடங்கு ஊக்குவிக்கிறது.
இனிப்பு உருளைக்கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கில் பீட்டா கரோட்டின் உள்ளன. இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கீரை: முடி வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலேட், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது முடி உதிர்வைத் தடுத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஓட்ஸ்: நார்ச்சத்துக்கள், இரும்பு, துத்தநாகம் மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இது தலைமுடிக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது.
கேரட்: இது கண்களுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு கூடுதலாகத் தலைமுடிக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகள்: கால்சியம் நிறைந்த உணவுகள் உங்கள் முடியை ஆரோக்கியப்படுத்தி முடி உதிர்தலைத் தடுக்கிறது. மேலும் வால்நட் மற்றும் ஆளிவிதை உள்ளிட்ட துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.