அட்லீ பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் வைத்து நயன்தாராவுக்கு ஜோடியாக ஜவான் படத்தை இயக்கினார். இப்படம் 2023யில் அதிக வசூலைக் குவித்த படத்தின் பட்டியலில் இடம்பெற்று சாதனைப்படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலே அதிக மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து டாப் ஹிட்டில் இன்றும் வளம் வருகிறது.
அட்லீ தமிழ் திரைத்துறையில் ரசிகர்களிடையே தொடக்கத்திலே நல்ல வரவேற்பைப் பெற்று தென்னிந்தியாவின் பிரபல இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் மாசான உடை அணிந்து மனைவி பிரியா அட்லீயுடன் கெத்தாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அட்லி இயக்கும் புதுப்படத்தின் ஹீரோ யார் என்று பார்க்கலாம்.
ராஜா ராணி படத்தில் தொடங்கிய அட்லீயின் திரைத்துறை வாழ்க்கை தற்போது பாலிவுட் வரை சென்றது வியக்கத்தக்க விஷயம்.
அட்லீ புதிதாக இயக்கும் பாலிவுட் படமான “பேபி ஜான்” படத்தில் நாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் ஹீரோ வருண் தவாண் இணைந்து நடித்துள்ளார்.
பேபி ஜான் படம் வேறெந்த கதையும் இல்லை. விஜய், எமி ஜாக்சன் மற்றும் சமந்தா உள்ளிட்டோர் நடித்த “தெறி” படத்தின் ஹிந்தி ரீமேக்தான் “பேபி ஜான்” திரைப்படம்.
பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அந்தவகையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் Murad Khetani பாலிவுட் தாயரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புதுப்படம் இயக்கவிருக்கிறார்.
அட்லீ உருவாக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அட்லீ படக்குழுவினர் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அட்லீ இயக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களில் இடம்பெற்ற படம் என்றே சொல்லலாம். அதிகமாக அட்லீ தேர்ந்தெடுக்கும் கதைகள் முழுவதும் ஒருகருத்தை அர்த்தமுள்ளதாக வெளிப்படுத்தும் தோரணையில் இவரது படங்கள் அமையும்.
அட்லீயின் படங்கள் தென்னிந்தியாவில் மாபெரும் ஹிட் அடித்தது, தற்போது பாலிவுட்டில் களமிறங்கி அங்கும் தனது கெத்தைக் காட்டி வருகிறார்.