கருட புராணத்தில் ஆயுள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது பற்றி சொல்லும் கருட புராணம், மனிதர்களின் ஆயுளை குறைக்கும் மற்றும் அதிகரிக்கச் செய்யும் செயல்களைப் பற்றியும் சொல்கிறது. சில செயல்கள் ஒருவரின் ஆயுளை பாதிக்கிறது. கருட புராணத்தின் படி, ஆயுளை குறைக்கக்கூடிய 5 விஷயங்கள் இவை...
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)
கருட புராணத்தின் படி, காலையில் தாமதமாக எழுவது ஆயுளைக் குறைக்கிறது. கருட புராணத்தின் படி, ஒவ்வொரு நபரும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். அதிகாலையில் காற்று தூய்மையாக இருக்கும். பல நோய்களைக் குணப்படுத்தக்கூடிய பல நுட்பமான சக்திகள் விடியற்காலையில் உள்ளது. தாமதமாக எழுபவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது.
கருட புராணத்தின் படி, இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. தயிர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது. இரவு நேரத்தில் சூரியனின் வெப்பம் இல்லாதபோது தயிர் உண்பது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஆயுள் குறையும் வாய்ப்புகள் ஏற்படுகிறது
இறந்தவரின் உடலை தகனம் செய்யும் போது, அதிலிருந்து பல வகையான தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வெளியேறும். சடலத்தை எரிக்கும்போது, சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் அழிந்துவிட்டாலும், சில புகையுடன் வளிமண்டலத்தில் பரவுகின்றன. அந்த புகையை ஒருவர் சுவாசிக்கும்போது, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அவரது உடலில் ஒட்டிக்கொண்டு பல வகையான நோய்களை பரப்புகின்றன. அந்த நோய்களால், ஒருவரின் ஆயுட்காலம் குறையலாம்.
கருட புராணத்தின் படி, காலை வேளையில் உடல் உறவு கொள்ளக்கூடாது. குறிப்பாக பிரம்ம முஹூர்த்தத்தில் உடல் உறவு கொள்வது ஆயுளைக் குறைகிறது.
உலர்ந்த மற்றும் பழைய இறைச்சி யாராயிருந்தாலும் தீங்கு விளைவிக்கும். உலர்ந்த மற்றும் பழைய இறைச்சியை சாப்பிடுவதால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும். பழைய இறைச்சியில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று, பல வகையான நோய்களை உண்டாக்கும், இது ஆயுளைக் குறைக்கும்.