Babar Azam: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் முல்தானில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் அடித்தும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இதனால் வீரர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தான் நிர்வாகம் சில பெரிய மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 2வது டெஸ்டில் இருந்து பாபர் அசாமை நீக்க முடிவு செய்துள்ளது.
பாபர் அசாம் சிறந்த வீரர் என்றாலும் தேசிய அணியிலிருந்து சிறிது காலம் ஓய்வு கொடுப்பது நல்லது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகின்றனர். பாபர் அசாம் 2022 டிசம்பருக்குப் பிறகு டெஸ்டில் அரைசதம் கூட அடிக்கவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 35 ரன்கள் மட்டுமே அடித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்டில் 21 சராசரி மட்டுமே வைத்துள்ளார்.
2023ல் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த பிறகு தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் பாபர். ஆனாலும் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார், பிறகு மீண்டும் விலகினார்.
வேறு எந்த அணியும் செய்திடாத மகத்தான சாதனையை பாகிஸ்தான் அணி வைத்துள்ளது. அதாவது சொந்த மன்ணில் கடைசியாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 1331 நாட்கள் ஆகிறது.