இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பைக் எது என்பது பற்றிய தகவல் பார்போம்.
ஐந்தாம் இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்கும் உள்ளன. பஜாஜ் பல்சர் 85,999 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது.
நான்காம் இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பைக் உள்ளது. சிபி ஷைன் மோட்டார்சைக்கிளில், 124 சிசி சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் இன்ஜினை வழங்கி வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்மில் 10.7 பிஎஸ் பவரையும், 6000 ஆர்பிஎம்மில் 11 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தை ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் பிடித்துள்ளது. 2021 மார்ச் மாத நிலவரப்படி 1,44,505 யூனிட் வரை இப்பைக் விற்பனையாகியிருக்கின்றது.
இரண்டாண் இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. 1,99,208 யூனிட் வரை விற்பனையைப் பெற்று இந்த இடத்தை ஆக்டிவா பிடித்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கே இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாகும். இந்த பைக் 2021 மார்ச் மாதத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 2,80,090 யூனிட் வரை விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதத்தைக் காட்டிலும் 94 சதவீதம் அதிக விற்பனை என ஹீரோ தெரிவித்துள்ளது.