Tourist Spots In Kerala: பட்ஜெட் விலையில் நீங்கள் கேரளாவில் சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் இந்த 8 இடங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
கேரளா அண்டை மாநிலம் என்பதால் போக்குவரத்துக்கும் எவ்வித பிரச்னை இருக்காது. தங்குமிடம், உணவுகள் ஆகியவற்றிலும் பெரிய செலவிருக்காது.
திருவனந்தபுரம்: கேரளாவின் தலைநகரான கடற்கரை, மிருகக்காட்சிச் சாலை, பாரம்பரியமிக்க கட்டடக்கலை ஆகியவற்றை இங்கு ரசித்து பார்க்கலாம்.
இடுக்கி: கேரளாவின் வசீகரமான நகரமான இதில் அகண்ட ஆறுகள், அணைகள், இயற்கை சூழல்கள் டாப் டக்கர் சுற்றுலா தலத்திற்கான அம்சங்களை கொண்டிருக்கும். பனிகள் அடர்ந்த மலைகள், வனவிலங்கு சரணாலயங்களும் இங்கு உள்ளன.
வாகமன்: கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு அருகே அமைந்துள்ள மலைப் பிரதேசம்தான் வாகமன். பசுமையான காடுகள், ஆறு, நீர்வீழ்ச்சி ஆகியவற்றை இங்கு ரசிக்கலாம்.
வயநாடு: கேரளாவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தளம் இதுதான். மலைகள், ஆறு, பனி படர்ந்த பிரதேசமாக ரம்மியான இடமாகும். மசாலா மற்றும் தேயிலை தோட்டங்கள் அப்பகுதி முழுவதும் வியாபித்திருக்கும்.
வர்கலா: கடற்கரை நகரமான வர்கலா உங்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற இடமாகும். கேரளாவின் கோவா என நெட்டிசன்கள் சொல்லப்படும் அளவிற்கு இந்த பிரதேசம் பிரபலமானது.
கொச்சி: அரபிக்கடல் ஓரம் இருக்கும் ஒரு அழகான நகரமாகும். அருங்காட்சியகம், அரண்மனைகள், கோட்டைகள் ஆகியவை இங்கு நிறைந்திருக்கின்றன. பல்வேறு கலாச்சார அடையாளங்களை கொண்ட நகரம் இதுவாகும்.
பாலக்காடு: கோவை மாவட்டத்தில் இருந்து சுமார் ஒரு மணிநேரத்தில் இந்த ஊருக்குச் சென்றுவிடலாம். தமிழர்கள் நிறைந்த இந்த பகுதியில் பழங்கால கோட்டைகள், சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகம் ஆகியவை இருக்கும்.
குமரகம்: இது நகரமில்லை, கோட்டயத்தில் வேம்பநாடு ஏரியின் கிராமம் ஆகும். அமைதியான சூழலும், சதுப்பு நிலங்கள், அடர்ந்த மரங்கள், ஆகியவை அடங்கிய மினி சொர்க்கம்தான் இந்த கிராமம். இதில் நீங்கள் அங்கிருக்கும் நீர்நிலைகளில் மீன்பிடிக்கலாம், படகு சவாரியும் செய்யலாம்.