2025 ஐபிஎல் மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒரு சில சீனியர் வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025ல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த வீரர்கள் தங்களுக்கு பிடித்த அணியில் இடம் பெற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் சில சீனியர் வீரர்கள் விற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது. அந்தவகையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போக கூடிய 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷிகர் தவான் சமீக காலமாக ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறது. இந்திய அணியிலும் இவரது இடம் பறிபோன நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் இவரை அணிகள் எடுப்பது சந்தேகமே.
ஐபிஎல்லில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான டேவிட் வார்னர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வரும் இவரை எந்த அணியும் எடுக்க வாய்ப்பில்லை.
நியூசிலாந்து முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் டி20 போட்டிகளில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அணியில் இடம்பெற்றதில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அணிகள் இவரை எடுக்க வாய்ப்பு இல்லை.