Health Tips In Tamil: நீங்கள் இந்த 5 உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்துவிட வேண்டாம். அப்படி குடித்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது என்றாலும் சில உணவுகளுடன் தண்ணீர் சேர்ந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.
தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது மட்டுமின்றி மிகவும் முக்கியமானதாகும். ஒருநாளில் குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது ஆகும். தண்ணீர்தான் உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுசெல்கிறது. தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சீராக இருக்கும். உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை சீராக வைக்க உதவும்.
தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகள் இருந்தாலும், நீங்கள் இந்த 5 உணவுகளையும் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்துவிடக்கூடாது. அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
சாதம்: சாதத்தில் ஸ்டார்ச் அதிகம் இருக்கும். எனவே, சாதத்தை சாப்பிடும்போது தண்ணீரையும் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
வாழைப்பழம்: வாழைப்பழத்திலும் அதிகளவில் ஸ்டார்ச் இருக்கிறது. எனவே, அத்துடன் நீங்கள் தண்ணீரை குடிக்கும்போது வயிற்றில் வாயு பிரச்னை ஏற்படும்.
பழங்கள்: எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சுகள் உள்ளிட்ட பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் செரிமானம் அமைப்பில் பிரச்னை வரும். அசிடிட்டி பிரச்னை வரும்.
யோகர்ட்: கெட்டித் தயிர் மற்றும் யோகர்ட் ஆகியவற்றில் புரதம் மற்றும் நல்ல நுண்ணுயிர்கள் இடம்பெற்றிருக்கும். சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் செரிமான பிரச்னை வரும். வாயு, அசிடிட்டி போன்ற பிரச்னை ஏற்படும்.
பருப்புகள்: பருப்புகள் உடன் நீங்கள் அதிகம் தண்ணீரை குடித்தால் அது செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.