Bottle Gourd: சுரைக்காய் சாப்பிடும்போது, அத்துடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல்நிலை பிரச்னை ஏற்படலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
உணவுப்பழக்கவழக்கத்தில் காய்கறிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். பெரும்பாலான காய்கறிகள் உங்களுக்கு நார்ச்சத்தை அளிக்கவல்லது. அந்த வகையில், சுரைக்காயும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.
சுரைக்காய் (Bottle Gourd) உடல் ஆரோக்கியத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் முதல் குடல் இயக்கம் வரை பல விஷயங்களை சீராக வைத்திருக்கும். மலச்சிக்கல் பிரச்னையை தவிர்க்க உதவும்.
ஆனால், சுரைக்காயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவை உடல்நலனுக்கு பிரச்னையை உண்டாக்கலாம். சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 உணவுகளை இங்கு காணலாம்.
சுரைக்காய் மற்றும் காலிஃபிளவர் (Cauliflower): இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமானத்தை பாதிக்கும்.
சுரைக்காய் மற்றும் பாகற்காய் (Bitter Gourd): இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஆகவும் வாய்ப்புள்ளது. எனவே, இதனை தவிர்க்கவும்.
சுரைக்காய் மற்றும் பால் (Milk): ஆயுர்வேதத்தின் படி இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது. இதனால் உடல்நிலையில் பிரச்னை வரலாம்.
சுரைக்காய் மற்றும் எலுமிச்சை சாறு (Lemon Juice): இந்த இரண்டையும் கலந்து உட்கொண்டால் சரும பிரச்னை ஏற்படும். அலர்ஜி வரலாம். வெள்ளைத் திட்டுக்கள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
சுரைக்காய் மற்றும் பீட்ரூட் (Beetroot): இந்த இரண்டையும் சேர்த்து் சாப்பிட்டால் முகத்திலும், உடம்பிலும் சொறி பிரச்னை வரலாம்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.