பலர் பிரிட்ஜில் எதைக் கொண்டு வந்தாலும் சேமித்து வைப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும். இப்படி செய்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த உணவு பொருட்களை இனி பிட்ஜெட்டில் வைக்கக்கூடாது. அவை என்ன பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்: மாம்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. இது அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்தை குறைக்கிறது.
பிரட்: பிரட்களையும் இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. பிரிட்ஜில் இருந்து வெளியாகும் காற்று, பிரட்டை விரைவில் கெட்டுப்போகச் செய்யும்.
இறைச்சி: பலர் இறைச்சி பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பார்கள். ஆனால் அது சுவையாக இருக்காது. நீங்கள் தரமான இறைச்சியை சாப்பிட விரும்பினால் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.
தேன்: சிலர் தேனை பிரிட்ஜில் சேமித்து வைப்பார்கள். தேன், பல வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாத இயற்கை உணவு. தேனை ஃபிரிட்ஜில் வைப்பதனால் அடர்த்தியாகி அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். வெளியில் வைப்பதுதான் நல்லது.
புதினா மற்றும் கொத்தமல்லி இலை: புதினா மற்றும் கொத்தமல்லி இலை போன்ற பொருட்களை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இதில் உள்ள அசுத்தங்கள் மற்ற காய்கறிகள் அல்லது உணவுகளில் சேர வாய்ப்புள்ளது