எல்.டி.சி வரி குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 மத்திய பட்ஜெட்டில் வெளியிட்டார்.
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி, LTCக்கு (விடுமுறை பயணச் சலுகை) எதிராக பெறப்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2021 மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Also Read | Ice பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 km நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா 4 உலக சாதனை
வரி விலக்கு எப்போது தொடங்கும்?: COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த வருமான வரி விலக்கு 2020 அக்டோபர் 12 ஆம் தேதி (2020-21 நிதியாண்டு) மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
வருமான விலக்கு நீட்டிக்கப்படுகிறதா?: கோவிட் -19 பாதிப்பு இன்னமும் தொடர்வதால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் 2018-21 என நான்கு ஆண்டுகளுக்கு வரி செலுத்தும் ஊதியதாரர்கள் அனைவருக்கும் இந்த வருமான வரி நிவாரணத்தை நீட்டித்துள்ளது.
சீதாராமன் தனது உரையில் என்ன சொன்னார்?: அனைத்து சம்பள வரி செலுத்துவோருக்கும் நிவாரணம் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் இவ்வாறு தெரிவித்தார்: "ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, எல்.டி.சி-க்கு பதிலாக ஒரு ஊழியருக்கு (குறிப்பிட்ட செலவினங்களுக்கு உட்பட்டு) வழங்கப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை: எல்.டி.சி ரொக்க வவுச்சர் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் காரணம் என்ன தெரியுமா? 2021 ஆம் ஆண்டு முடிவடையவிருக்கும் நான்கு ஆண்டு தொகுதியில், மத்திய அரசு ஊழியர்களால் பெறப்படாத எல்.டி.சியின் அளவு குறையும், ஆனால் இது ஊழியர்களைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்காக அறிவிக்கபட்டுள்ளது. இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்யும் ஊழியர் 2021 மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் 3 மடங்கு கட்டணம் மற்றும் 1 முறை விடுமுறையை பணமாக்கும் தொகைக்கு சமமான பொருட்கள் அல்லது சேவைகளை வாங்க வேண்டும். வாங்கிய பொருட்கள் 12 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஜிஎஸ்டி செலுத்துவதாக இருக்க வேண்டும்.
இந்த நன்மையைப் பெறுவதற்கான நிபந்தனைகள்: 1] ஊழியர் எல்.டி.சி கணக்கின் உரிமையை விட பெரிய தொகையை உண்மையான செலவினங்களுக்காக செலவிட வேண்டும்
எல்.டி.சிக்கு நிகரான தொகையை செலவிட்டால், அதற்கு சமமான ரொக்கத்தொகையைப் பெறலாம். இது ஒரு ஊழியருக்கு கிடைக்கக்கூடிய எல்.டி.சி-யில் உள்ள விடுமுறை குறியீட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அகவிலைப் படி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அகவிலைப்படியில் குறைந்தது 4 சதவீத உயர்வு அறிவிக்கும் என்று ஏ.ஐ.சி.பி.ஐ (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) தரவை மத்திய தொழிலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
2020 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான 4 சதவீத அகவிலைப் படி உயர்வு, 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஊழியர்களின் மாத சம்பளத்தில் சேர்க்கப்படாது என்று மத்திய அரசின்அறிவிப்பு தெரிவிக்கிறது. ஆனால், டிஏ உயர்வை அறிவித்து, அதை மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சேர்த்தால், அது ஊழியர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை LTC அதாவது விடுமுறை பயணப்படி கிடைக்கிறது. அதை பயன்படுத்தி, அவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஊழியர் தனது சொந்த ஊருக்கு இரண்டு முறை செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இந்த பயணக் கொடுப்பனவில், விமானப் பயணம் மற்றும் இரயில் பயணச் செலவை ஊழியர் பெறுகிறார். இதன் மூலம், ஊழியர்களுக்கு 10 நாள் பி.எல் (சிறப்பு விடுப்பு) கிடைக்கிறது.