கீரைகள் மிகவும் ஆரோக்கியமானது தான் என்றாலும், அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும்.
பச்சை இலைக் காய்கறிகள், அதிலும் கீரைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. ரத்த சோகையை போக்க, ஹீமோகிளோபினை உருவாக்கும் கீரை அவசியம் நமது டயட்டில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது.
பச்சை இலைக் காய்கறிகள், அதிலும் கீரைகள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கீரையில் கால்சியம் ஆக்சலேட் ஏராளமாக உள்ளது. எனவே இதனை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரகத்தில் சிறிய கற்களை உருவாக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கீரை செரிமான அமைப்புக்கு சிறந்ததாக கருதப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நீங்கள் அதை வரம்பிற்கு மேல் சாப்பிட்டால், அது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கீரையை அதிகமாக உட்கொண்டால், மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் வரலாம்.