ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத், தற்போதைய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனைப் பாராட்டி உள்ளார்.
லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் பாராடியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, "சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கு தான் உள்ளன. நவீன கால கிரிக்கெட் வீரர்கள் இதனை சிறப்பாக செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நாதன் லயன் 500 டெஸ்ட் விக்கட்டுகளை எடுத்துள்ளார். அவரின் வளர்ச்சி மிக அபாரமானதாக உள்ளது.
மேலும் அவர் என் சாதனையை முறியடித்தால் அவருக்கு பெருமையாக இருக்கும். யன் மிகச் சிறப்பான வாழ்க்கையை தற்போது பெற்றுள்ளார்.
அவருக்கு என் நல்வாழ்த்துக்களை நான் கூறிக் கொள்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளேன்.
இதனால் அதில் சற்று என் கை ஓங்கி உள்ளது. லயன் இன்னமும் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினால் ஷேன் வார்னேவின் 708 விக்கட்டுகளை அவரால் முறியடிக்க முடியும்.
அவரது ஆட்டம் நன்றாக உள்ளது. பேட்ஸ்மேன்களின் விக்கட்டை வீழ்த்துவது பற்றிய அவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்." என பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் நாதன் லயன் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.