Smartphones: அமேசானில் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
தள்ளுபடி காலம் முடிந்த நிலையிலும், 8ஜிபி RAM உடன் ரூ.20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள மொபைல்களை் அமேசானில் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
இதில், Redmi, Realme போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன.
OnePlus Nord CE 3 Lite 5G: இது தற்போது 19 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரதான கேமரா மற்றும் பல்வேறு படப்பிடிப்பு முறைகள் உள்ளிட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் 6.72-இன்ச் டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) கொண்டுள்ளது.
Lava Agni 2 5G: இதன் விலை 19 ஆயிரத்து 999 ரூபாய். இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் 66W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கேமரா அமைப்பில் 50MP குவாட்-கேமரா அமைப்பு மற்றும் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
Redmi Note 12 5G: இந்த ஸ்மார்ட்போனின் விலை 18 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இதனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்தால் மேலும் 2 ஆயிரம் ரூபாய் உடனடி தள்ளுபடியையும் பெறலாம். இது 6.67-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1080x2400 ரேஸ்சொல்யூஷன் கொண்டது. Qualcomm Snapdragon பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி, 6ஜிபி அல்லது 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது.
Oppo A79 5G: இது 19 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 33W SUPERVOOC சார்ஜிங் ஆதரவு, AI ஆற்றல் சேமிப்பு உடன் 5000 mAh பேட்டரி உள்ளது. 8ஜிபி RAM, 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் (1டிபி வரை விரிவாக்கக்கூடியது), மற்றும் இரட்டை 5ஜி சிம் ஸ்லாட்டுகளுடன் வருகிறது.
Realme 11 5G: இந்த ஸ்மார்ட்போனின் 18 ஆயிரத்து 599 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த சாதனம் 8ஜிபி RAM, 256GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் (2TB வரை நீட்டிக்கத்தக்கது). இது 6.72-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.