School Lunch Ideas: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நீங்கள் அனுப்பிய மதிய உணவை சரியாக சாப்பிடவில்லையா? மதிய உணவில் இப்படிப்பட்ட உணவுகளை கொடுத்தால் ஏன் சாப்பிட மாட்டார்கள்?
பல குழந்தைகள் மதிய உணவை பள்ளியில் சாப்பிடாமால் பிறருக்கு கொடுத்துவிடுவார்கல். அம்மாவின் திட்டில் இருந்து தப்பிக்க குழந்தைகள் இப்படி திட்டம் தீட்டக்கூடாது, குழந்தை ஆர்வத்துடன் சாப்பிடும் பொருட்களைச் மதிய உணவுக்கு கொடுத்து அனுப்பினால் இந்த சிக்கல் தீர்ந்துவிடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
பள்ளிக்குச் செல்லும் குழந்தை இருக்கும் வீட்டில், அவர்களை உணவு உண்ண வைப்பது என்பது சற்று சிரமமான விஷயம். வீட்டில் எப். படியாவது தாஜா செய்து உணவு கொடுத்துவிட்டாலும், மதிய உணவு விஷயத்தில் குழந்தைகள் மக்கர் செய்வதை தடுக்க முடிவதில்லை. எனவே மதிய உணவில் சுவையான பலவகைகளை அனுப்பினால், உணவு பிரச்சனை தீர்ந்துவிடும். உங்களுக்காக ஐந்து சூப்பர் மதிய உணவு தெரிவுகள்...
மதிய உணவை மாற்றுவது என்பது டிபன் பாக்ஸை மாற்றுவது அல்ல, அதற்குள் இருக்கும் பொருட்களை மாற்ற வேண்டும். வெண்ணெய் மற்றும் முட்டைகளால் செய்யப்பட்ட சாண்ட்விச் உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். அது, குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவரை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். நன்றாக பசி தங்கும் உணவு இது.
சம்மர் ரோல்ஸ் என்றால் மாவில் பல்வேறு வகையான ரோல்களை செய்து அதில் வேர்க்கடலை சாஸ் பயன்படுத்துவது ஆகும். வேர்க்கடலை ஒரு சூப்பர்ஃபுட் என்றே சொல்லலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக இருக்க உதவும். இது குழந்தை வெளியில் சாப்பிடுவதைத் தடுக்கிறது.
குயினோவா போன்ற சூப்பர்ஃபுட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நெல்லிக்காய், பேரிக்காய் ஆகியவற்றை மதிய உணவில் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம். இவை அனைத்தும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
புரோட்டீன் சாலட் என்பது உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை வழங்குவதாகும், இதில் முட்டை, டோஃபு, பீன்ஸ், ஈஸ்ட், உலர் பழங்கள், பச்சை பட்டாணி, சோயா பொருட்கள், ஓட்ஸ் ஆகியவை அடங்கும். இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் சாலடுகள் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கும். எனவே, புரதம் நிறைந்த மதிய உணவை குழந்தைக்குக் கொடுங்கள்.
பச்சைக் காய்கறிகளால் செய்யப்பட்ட சாண்ட்விச்களை உங்கள் குழந்தைக்கு மதிய உணவில் கொடுக்கலாம், முட்டைக்கோஸ் முதல் வெள்ளரி, தக்காளி, கீரை மற்றும் வெங்காயம் என உங்கல் குழந்தைக்கு பிடித்த காய்கறிகளை இதில் பயன்படுத்தலாம். இந்த சாண்ட்விச் சுவையாக மட்டும் இல்லாமல் பல சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.