Drinking Water Tips | தினம்தோறும் ஒருவரின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வரும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Drinking Water | உடல் தண்ணீரால் தான் இயங்குகிறது. உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியமானது.
தண்ணீர் குடிப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பெரும்பாலனவர்களுக்கு இருக்கதான் செய்கிறது. எனவே இது தொடர்பாக அதிகப்படியான மக்களுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை பெரும்பாலும் செய்தனர். இதனால் இயல்பாகவே அவர்களுக்கு வேர்க்கக்கூடும், தாகமும் எடுக்கும். அதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை அவர்கள் எடுத்துக்கொண்டர்.
ஆனால் நம்முடைய வாழ்கை முறையில் உடல் உழைப்பு என்பதே மிகவும் குறைவு. பெரும்பாலனவர்களுக்கு குறிப்பாக ஐடி ஊழியர்கள் ஏசி அறையில் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு வேர்க்கவும் செய்யாது, தாகமும் எடுக்காது. இதுபோலவே வீட்டில் இருக்கும் சிறுவர்கள் கூட வெளியே விளையாட செல்வதை தவிர்த்து மொபைல் போனில் நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் நமக்கு தாகம் எடுப்பதே இல்லை.
தாகம் எடுக்கவே இல்லை என நினைத்து தண்ணீர் குடிக்காமலே இருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். கண்களுக்கு கீழ் கருவளையம், பார்வை குறைபாடு, வறண்ட சருமம் , இவை உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள். எனவே தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
20 கிலோ எடைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் நாள் ஒன்றுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணமாக 60 கிலோ எடை உடையவர்கள் நாளொன்றுக்கு 3லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆனால் 60 கிலோ எடை உடையவர் நாளொன்றுக்கு 5 லிட்டர் தண்ணீர் சில ஆண்டுகள் தொடர்ந்து குடித்தால் அது ஆபத்துதான். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் கிட்னியின் செயல்பாடு அதிகரிக்கும்.