இனி ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் இத்தனை நாட்கள் சிம் ஆக்டிவாக இருக்கும்!

TRAI சிம் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி இனி ஜியோ, ஏர்டெல், விஐ சிம்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சில நாட்கள் செயலில் இருக்கும்.

1 /6

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் அடுத்த 90 நாட்களுக்கு சிம்கார்ட் ஆக்டிவாக இருக்கும்.  

2 /6

பலரும் தங்களது 2வது சிம்க்கு ரீசார்ஜ் செய்வதை தவிர்க்கின்றனர். இதனால் நிறைய நம்பர்கள் ஆகிடிவில் இல்லாமல் போகிறது. இதனை சரி செய்ய சிம்களை செயலில் வைத்திருக்கும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 /6

மற்ற சிம்களை விட BSNL அதிக நாட்கள் வேலிடிட்டியை தருகிறது. 180 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் தொடர்ந்து சிம்மை பயன்படுத்தி கொள்ளலாம்.

4 /6

Vi (Vodafone Idea) பயனர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை அதன் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு, சிம்மை செயலில் வைத்திருக்க ரூ.49 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

5 /6

ஏர்டெல் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்களுக்கு மேல் சிம் கார்டை பயன்படுத்தலாம். அதன்பிறகு, 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.

6 /6

ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சிம் கார்டு நிரந்தரமாக துண்டிக்கப்படும்.