BSNL இன் புதிய திட்டம் முழுதாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குவதோடு மொத்தம் 180 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தை பற்றி முழு விவரம் இங்கே காண்போம்
கொரோன ஊரங்கு காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் அவ்வபோது புதிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஊரடங்கு விதிக்கபட்டு உள்ளதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன. அதன்படி பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அதன் போட்டியாளர்களுக்கு மத்தியில் போராடினாலும் கூட அதன் பயனர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதை நிறுத்தியதே இல்லை.
பி.எஸ்.என்.எல் சென்னை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் சில "அதிரடி" திருத்தங்களை செய்துள்ளது. அவை எஸ்.டி.வி 499 மற்றும் எஸ்.டி.வி 198 ஆகும்.
BSNL நிகழ்த்தியுள்ள திருத்தத்திற்கு பிறகு எஸ்.டி.வி 499 ஆனது கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 499 ஆனது அதன் பயனர்களுக்கு 1 ஜிபி அளவிலான டெய்லி எஃப்யூபி டேட்டா, உண்மையிலேயே வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்கியது. இது தவிர, பிஎஸ்என்எல் டியூன் நன்மை மற்றும் ஸிங் நன்மைகளையும் இந்த திட்டம் வழங்கியது. இதன் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் ஆகும்.
தற்போது திருத்தத்திற்குப் பிறகு, இந்த திட்டத்தின் டேட்டா நன்மை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதாவது 1 ஜிபி டெய்லி டேட்டாவில் இருந்து 2 ஜிபி டெய்லி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக பயனர்கள் இப்போது முந்தைய 90 ஜிபிக்கு பதிலாக மொத்தம் 180 ஜிபி அளவிலான டேட்டாவைப் பெறுவார்கள்.
பிஎஸ்என்எல் எஸ்டிவி ரூபாய் 198 திட்டத்தின் நன்மைகளை குறைத்துள்ளது. முன்னதாக, இது பயனர்களுக்கு 2 ஜிபி டெய்லி எஃப்யூபி டேட்டாவை 54 நாட்களுக்கு வழங்கியது, உடன் காலர் ட்யூனை மாற்றுவதற்கான கூடுதல் நன்மையும் இருந்தது.
தற்போது திருத்தத்திற்குப் பிறகு, இந்த திட்டத்தின் 50 நாட்கள் என்கிற குறைக்கப்பட்ட வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் இதன் காலர் ட்யூன் நன்மையானது லோக்தூன் கன்டென்ட் நன்மையுடன் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தின் 2 ஜிபி டெய்லி டேட்டா நன்மையில் எந்த. மாற்றமும் இல்லை. அதே சமயம் இதுவொரு டேட்டா ஒன்லி வவுச்சர் என்பதால், பயனர்கள் இதன் வழியாக எந்தவொரு குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளையும் பெற மாட்டார்கள்.