இந்திய அணியின் மும்பை ரோட் ஷோ... நீங்களும் நேரலையில் பார்க்கலாம்... எப்படி?

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அதனை கொண்டாடும் விதமாக மும்பையில் வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் ரோட் ஷோ நடைபெற இருக்கிறது. அதனை நேரலையில் எதில் காண வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலககக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.

 

 

1 /8

9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டாவது முறையாக தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.   

2 /8

இறுதிப்போட்டி நடைபெற்ற பார்படாஸ் நகரில் புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அங்கு நிலைமை சீரான நிலையில் இந்திய அணி இன்று காலையில் நாடு திரும்பியது.  

3 /8

ஏர் இந்தியாவின் சிறப்பு தனி விமானத்தில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இந்திய அணிக்கு ஏகோபித்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அணி டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐடிசி மயூரா நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற நிலையில், ஹோட்டலுக்கு வெளியேவும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி இந்திய அணிக்கு வரவேற்பு அளித்தனர்.   

4 /8

ஹோட்டலுக்கு வெளியே வீரர்களை வரவேற்க மேளதாளங்கள் வாசிக்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் நடனமாடியபடி தங்களின் கொண்டாட்டத்தை வெளிக்காட்டினர். இந்திய அணி வீரர்களுக்கு சிறப்பான குடிபானம் அளித்து ஹோட்டலிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.  

5 /8

தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திதல் இன்று சந்தித்தனர். அவர்களுக்கு அங்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பிரதமரை சந்திக்கச் சென்றுபோது அவர்கள் 'Champions' என அச்சிடப்பட்ட இந்திய அணி ஜெர்ஸியை அணிந்து சென்றனர். டெல்லியில் இருந்து தற்போது மும்பைக்கு இந்திய வீரர்கள் புறப்பட்டனர். அவர்கள் நான்கு மணிக்கு மும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.   

6 /8

அவர்கள் மும்பையின் கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு வருகை தருவார்கள்.  அங்கிருந்து சுமார் இரண்டு மணிநேரம் மாபெரும் ரோட் ஷோ நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு என தயார்செய்யப்பட்டுள்ள பிரத்யேகமான திறந்தவெளி பேருந்தில் இந்திய அணி வீரர்கள் ரோட் ஷோ மேற்கொள்கின்றனர். இந்த மாபெரும் பேரணி சுமார் 2 மணிநேரம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. பேரணிக்கு பின்னர் மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

7 /8

இன்று மாலை 5 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் தொடங்கும் இந்த பேரணி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் உள்ள வான்கடே மைதானம் வரை நீடிக்கிறது. இதில் வழிநெடுக இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினரை வாழ்த்தி தங்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.     

8 /8

இந்த பேரணியை நீங்கள் நேரலையிலும் காணலாம். இதனை தொலைக்காட்சியில் பார்க்க நினைப்பவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் பார்க்கலாம். அதேபோல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதன் யூ-ட்யூப் பக்கத்திலும் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. மாலை 4 மணிக்கு இந்த நேரலை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் நேரலையில் காணலாம். BCCI.TV