Ratan Tata Tips And Advice To Achieve Success : மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வெற்றிக்கு கூறியிருக்கும் அட்வைஸை இங்கு பார்ப்போம்.
Ratan Tata Tips And Advice To Achieve Success : தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ரத்தன் டாட்டா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர், உயிருடன் இருந்த போது வெற்றி பெறுவதற்கு சில வழிகளை கூறுகிறார். அவை என்னென்ன தெரியுமா?
உங்கள் லட்சியங்களும் இலக்குகளும் பெரிதாக இருக்க வேண்டும். கனவு காண்பதற்கு கூட, ஒரு எல்லைக்கோட்டினை வைத்துக்கொண்டு அதற்குள்ளாகவே இருக்க கூடாது.
வெற்றி என்பது ஒரே முயற்சியில் வந்துவிடும் விஷயம் அல்ல. எனவே, விடாமுயற்சியை உங்கள் நண்பராக்கி கொள்ள வேண்டும்.
உங்கள் தவறுகள் உங்களுக்கு நல்ல பாடங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. எனவே, எந்த தவறு செய்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில் கண்ணாக இருக்க வேண்டும்.
புதுமையை இன்முகத்துடன் வரவேற்கும் தன்மை உங்களிடம் இருக்க வேண்டும். எப்போதும், புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்வில் உங்களுக்கென்று சில நெறிமுறைகளையும், தரநிலைகளை வைத்துக்கொண்டு வாழ வேண்டும். அப்போதுதான் நீங்கள் தன்நிலை மாறாமல் இருப்பீர்கள்.
உங்களை தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் ரீதியாகவும் உயர்த்தும் மனிதர்களுடன் நல்ல உறவினை வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இந்த சமூகம் சில விஷயங்களை கொடுக்கும் போது, அதனிடம் நீங்களும் சில விஷயங்களை திரும்ப கொடுத்து, நலிந்தோருக்கு உதவி புரிய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி நிலைக்கும்.
வாழ்க்கை, உங்களை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றாலும், அடக்கத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.