ஜியோ மீண்டும் ஏர்டெல்லுடன் போட்டியிட ஒரு சூப்பரான இலவச திட்டத்தை கொண்டு வருகிறது. அழைப்பு மற்றும் டேட்டா கிடைக்கும் இந்த பிளானில் OTT சந்தாவும் கூடுதலாக கிடைக்கும்.
ஜியோ பல நன்மைகளைக் கொண்ட புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை வாங்கிய பிறகு, அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா மற்றும் 14 OTT சந்தா ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறுவீர்கள்.
இது தவிர ஜியோ டிவி அப்ளிகேஷன் மூலம் நேரலை டிவியையும் பார்க்கலாம். அந்தவகையில் ஜியோ அறிவித்திருக்கும் புதிய திட்டங்கள் 148, 398, 1198 மற்றும் 4498 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்கினால், வாடிக்கையாளர்களாகிய நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1198 திட்டத்தைப் பற்றி பேசுகையில், அதன் வேலிடிட்டி 84 நாட்கள்.
இதில் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இது 14 OTT சந்தாவை வழங்குகிறது.
ஜியோ டிவி அப்ளிகேஷன் இதில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் எங்கும் எப்போதும் லைவ் டிவியை பார்த்து ரசிக்கலாம். அதற்காக கூடுதல் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
14 OTT சந்தா சலுகைகளில் Jio TV Premium அடங்கும். இதில் Jio சினிமா பிரீமியம், Disney+Hotstar, Zee5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet Marathi, Chaupal, EpicON மற்றும் Kanchcha Lannka ஆகியவற்றின் சந்தாக்களும் கிடைக்கும். படம் அல்லது வெப்சீரிஸ் பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.