Jio Feature Phone: இந்தியாவில் 2ஜி நொட்வொர்க்கு முக்தி கொடுக்கும் விதமாக 4ஜி நெட்வொர்க்கில் யுபிஐ பணப்பரிவர்த்தனை வசதியுடன் புதுபோனை அறிமுகப்படுத்துகிறது ஜியோ.
ஜியோ நிறுவனத்தைப் பொறுத்தவரையில் பிஸ்னஸ் என்று வந்துவிட்டால் பாரபட்சமே இல்லாமல் புது பிளானை அறிமுகப்படுத்துவதில் கில்லாடி. ஏர்டெல், பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்கு ஈடுகொடுப்பதற்கே திண்டாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் இப்போது புது பிளானை கையில் எடுத்திருக்கிறது ஜியோ. இந்தியாவில் இருந்து 2ஜி நொட்வொர்க்கையே முழுமையாக காலி செய்ய புது பிளான் போட்டிருக்கிறது ஜியோ. அதாவது ப்யூச்சர் போனிலேயே 4ஜி நொட்வொர்க்குடன் யுபிஐ பணப்பரிமாற்றம் வசதியையும் கொடுக்க இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த போனின் விலை வெறும் ஆயிரம் ரூபாய் தானாம். இந்த போன் வந்துவிட்டால் 2ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்படுவது என்பது காணாமலேயே போய்விடும்.
ஜியோ பாரத் பி2 என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் இந்த ஜியோ போன், பிஐஎஸ் சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. அதனால் இந்த போன் வர இருப்பது உறுதியாகியுள்ளது.
புதிதாக அறிமுகமாகும் ஜியோ ப்யூச்சர் போனில் யுபிஐ கட்டணங்களை (UPI Payments) பரிவர்த்தனை செய்யலாம். ஜியோ சினிமா ஆப் (Jio Cinema) பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ பார்த் பி1 போனில் ஜியோசாவன் (JioSaavn), ஜியோபே (JioPay) மற்றும் பல தளங்களுக்கான அணுகல்களும் உள்ளன. மேலும் பேக் பேனலில் டிஜிட்டல் கேமரா, 2000எம்ஏஎச் பேட்டரி, 2.4-இன்ச் டிஸ்பிளேவும் இருக்கும்.