உலக நாயகன் கமல் உடன், கிரிக்கெட் வீரர் பிரவோ திடீர் சந்திப்பு?

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிரவோ சந்திதுள்ளார்...
  • Dec 11, 2019, 15:43 PM IST

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிரவோ சந்திதுள்ளார்...

1 /4

ஜூலை 2016-ல் கூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால், கமல்ஹாசனின் வலது காலில் வைக்கப்பட்டிருந்த ஒரு உள்வைப்பை அகற்றுவதற்காக நவம்பர் 22-ஆம் தேதி மற்றொரு அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. அந்த அறுவை சிகிச்சை முறையிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மீண்டு வருகிறார்  

2 /4

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்திதுள்ளார். பிஹைன்ட்வுட்ஸின் "குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்" தங்கப் பதக்கத்தை வென்ற பிரவோ, தனது நிகழ்ச்சியைன தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை சந்திதுள்ளார்.

3 /4

தற்போது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் நடிகர் கமல்ஹானை பிரவோ சந்திதுள்ள சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமல்ஹாசனுக்கு அவரது கையொப்ப சேகரிப்பில் இருந்து டி-ஷர்ட்டை பரிசாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது! இந்த புகைப்படங்களை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

4 /4

முன்னதாக சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் அளித்திருந்த பிராவோ தற்போது கமல்ஹானை சந்தித்துள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் ப்ரவோ நடிக்கின்றாரா? என்ற கேள்விஇணைய வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.