Vidaamuyarchi Box Office Collection Day 3: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரம் குறித்து இங்கு பார்ப்போம்.
Vidaamuyarchi Box Office Collection Day 3: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் படம், விடாமுயற்சி. இந்த படம், பிப்ரவரி 6ஆம் தேதி உலகளவில் வெளியானது. இந்த படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம், விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார்.
இது, அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடிக்கும் 5வது படமாகும். இதில் அஜித்தின் பெயர் அர்ஜுன் த்ரிஷாவின் பெயர் கயல்.
விடாமுயற்சி படத்தில் அர்ஜுன்-ரெஜினா ஆகியோர் நெகடிவ் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விடாமுயற்சி படம் இந்திய அளவில் முதல் நாளில் 26 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களில், இப்படம் 50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படத்தின் வசூல், இதுவரை வெளியான அஜித் மற்றும் பிற டாப் நட்சத்திரங்களின் படங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
சனி-ஞாயிறு விடுமுறை தினங்களிலாவது இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3ஆம் நாளில் இப்படம் 10.52 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தமாக இப்படம், 46.77 கோடி கலெக்ட் செய்திருப்பதாக திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.