Actress Taapsee Pannu Wedding : ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான டாப்சி, தனது 10 வருட காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?
Actress Taapsee Pannu Wedding : 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஆடுகளம்’ படம் மூலம் பிரபலமானவர், தாப்சி. பாலிவுட் நடிகையான இவர், தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை ‘வெள்ளாவி நடிகை’ என அறியப்படுகிறார். காரணம், ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற “உண்ண வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..” வரி, இவருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் இவர் தென்னிந்தியாவை பொறுத்தவரை பிரபலமான நடிகையாகவே விளங்குகிறார்.
தென்னிந்த அளவில் பிரபலமாக இருக்கும் பாலிவுட் நடிகைகளுள் ஒருவர், டாப்சி. இவர் முதன் முதலாக தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானார்.
டாப்சி, தற்போது அதிக ரசிகர்களை கொண்ட இந்தி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சுமார் 14 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் இவர், சமீபத்தில் வெளியான ‘டன்கி’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
டாப்சி தமிழில், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம், காஞ்சனா 2, கேம் ஓவர், ஆனபெல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
டாப்சி, கடந்த 10 ஆண்டுகளாக மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வந்துள்ளார். மத்தியாஸ் போ, ஒரு பேட்மிட்டன் விளையாட்டு வீரர்.
மத்தியாஸிற்கு, தற்போத் 43 வயதாகிறது. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ, சம்மர் ஒலிம்பிக்ஸ், ஐரோப்பிய சாம்பியன் ஷிப் போட்டி போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு அதில் பல மெடல்களையும் வாங்கி குவித்திருக்கிறார்.
டாப்சிக்கும், மத்தியாஸிற்கும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் ரகசியமாக திருமணம் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனராம்.