சூர்யா-ஜோதிகா மகள் தியாவிற்கு வயது என்ன தெரியுமா?

Latest Photos Of Actor Suriya Jyothika Daughter Diya : சூர்யா ஜோதிகாவின் மகள் தியாவின் வயது என்ன தெரியுமா? அது குறித்து இங்கு பார்ப்போம். 

Latest Photos Of Actor Suriya Jyothika Daughter Diya : கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவரும் நடிகை ஜோதிகாவும் கடந்த 2006ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா-தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் பட ப்ரமோஷன் என இருவரும் பிசியாக இருந்தாலும், தங்கள் குழந்தைகளை கவனிக்க மறப்பதே இல்லை. சமீபத்தில் தியாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதிலிருந்து இவர் குறித்த தகவல்களை ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். 

1 /7

2006ஆம் ஆண்டில் திருமணம் முடித்த ஜோதிகா-சூர்யாவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளின் பெயர் தியா, இளைய மகனின் பெயர் தேவ். 

2 /7

சூர்யாவும் ஜோதிகாவும் தங்கள் படங்களில் நடிக்கும் போது எவ்வளவு பிசியாக இருந்தாலும், குடும்பத்திற்கென நேரம் ஒதுக்க தவறாதவர்களாக இருக்கின்றனர்.

3 /7

சென்னையில் வசித்து வந்த இவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு பிள்ளைகளுடன் குடிபெயர்ந்தனர். இப்போது அவர்களின் பிள்ளைகள் அங்கிருக்கும் பள்ளியில்தான் பயின்று வருகின்றனர். 

4 /7

சூர்யாவும் ஜோதிகாவும் குடும்பத்துடன் அவ்வப்போது வெக்கேஷனும் சென்று வருகின்றனர். அப்போது அவர்கள் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. இதை பார்க்கும் ரசிகர்கள், தேவ், சூர்யா போல இருப்பதாகவும், தியா ஜோதிகா போல இருப்பதாகவும் கூறி வருகின்றனர். 

5 /7

தியா, சமீபத்தில் தனது பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்றார். இதற்காக இவர் குறும்படம் ஒன்றையும் இயக்கினார். இதற்காக இவருக்குப் பரிசும் கிடைத்திருக்கிறது. 

6 /7

சமீபத்தில் சூர்யா தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அதில் இடம் பெற்றிருந்த தியாவையும் தேவ்வையும் பார்த்தவர்கள், “இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே..” என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

7 /7

தியாவிற்கு தற்போது 17 வயது ஆகிறது. அதே போல அவரது தம்பி தேவ்விற்கு 14 வயதாகிறது.