ஏ.ஆர். முருகதாஸின் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

தமிழ் சினிமாவில் பெஸ்ட் இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இவர் படம் இயக்கியுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் எஸ்.கே. 23 படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது. பூஜை நடந்த மறுநாளில் இருந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கிவிட்டது.

 

1 /6

துப்பாக்கி: ஏ.ஆர். முருகதாஸ் விஜய் முதல் முறையாக கூட்டணி அமைத்தது இப்படம் மூலம் தான். ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

2 /6

தீனா: ஏ.ஆர். முருகதாஸின் திரையலக ஆரம்பப்புள்ளி தீனா திரைப்படம் தான். அஜித் - சுரேஷ் கோபி நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

3 /6

ரமணா: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சிம்ரன், விஜயன், யுகி சேது, அஷிமா பாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

4 /6

கஜினி: சூர்யா - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான சிறப்பான தரமான திரைப்படம் கஜினி. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா, பிரதீப் ராம் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

5 /6

7ஆம் அறிவு: 7ஆம் அறிவு போதிதர்மரை வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.  

6 /6

கத்தி:  ஏ.ஆர். முருகதாஸின் திரைப்படங்களில் ஒன்று கத்தி. இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். மேலும் இப்படமும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  

Next Gallery