(Mercury Transit 2025): இந்த கிரக மாற்றத்தால் இந்த குறிப்பிட்ட ராசிகள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், செல்வச் செழிப்புடனும் அமையும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள்.
Zodiac signs will make life lucky: கிரகங்களில் அதிபதியான புதன் சதய நட்சத்திரத்தில் நுழையவிருக்கிறார். வேத ஜோதிடத்தின்படி இன்னும் சில மணி நேரத்தில் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் நுழைகிறார். இதனால் இந்த ராசிகள் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறும் என்று கூறப்படுகிறது.
புதன் இடப்பெயர்ச்சி 2025(Mercury Transit 2025): கிரகங்களின் அதிபதியான புதன் சில மணி நேரங்களுக்குள் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நுழையவுள்ளார். அத்தகைய சூழ் நிலையால் இந்த ராசிகளின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக மாறப்போவதாகக் கூறப்படுகிறது.
புதன் இடப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு நேர்மறை தாக்கம் உண்டாகும். நாளை பிப்ரவி 15, 2025 சரியாகப் புதன் ராகுவின் சதய நட்சத்திரத்தில் நுழைவார் என்று வேத ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
நாளை மாலை 5:08 மணிக்குப் புதன் வக்கிர கதியில் நுழைகிறார். புதனும் ராகுவும் நட்பு கிரகங்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
ராகுவால் லாப நஷ்டங்கள் மற்றும் பொருள் விஷயங்களில் அம்சமாகக் கருதப்பட்டாலும், புதம் புத்திசாலித்தனமாக வணிகம் மற்றும் உரையாடல் போன்றவற்றில் அம்சமாக கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
புதன் ராகு நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் சூழ் நிலையில் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் நிகழலாம் அல்லது சுப காரியங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. புதன் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தில் மாறுவார்கள்.
மேஷம்(Aries): புதன் சஞ்சாரத்தால் இவர்களுக்கு நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் நிகழும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும், உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து திடீர் நிதி ஆதாயம் கிடைக்கலாம். தடைகள் நீங்கி வேலையில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்தில் இல்வாழ்க்கை மேம்படும்.
மிதுனம்(Gemini): இந்த நேரம் உங்களுக்குப் பொன்னான நேரமாக அமைகிறது. வாழ்க்கையில் எதிர்கொண்ட சவாலான பிரச்சனைகள் தீர்க்கப்படும். உறவுகள் மற்றும் நண்பர்களிடையே உறவு பலப்படும். குடும்பத்தில் நல்ல நேரம் செலவிடுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயம் பெறுவீர்கள். நிதி நிலைமை பலப்படும்.
துலாம்(Libra): இந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் சாதனை காலமாக உள்ளது. எண்ணங்கள் தெளிவாகும், திறமைகள் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றிபெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். அரசியலில் பதவி உயர்வு அல்லது நல்ல பெயர் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.