தோனி விளையாடுவாரா மாட்டாரா... சிஎஸ்கே நிர்வாகம் போடும் பரபர மீட்டிங் - அறிவிப்பு எப்போது?

Chennai Super Kings: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு, வரும் சீசனில் தான் விளையாடுவது குறித்த முடிவை தோனி விரைவில் சிஎஸ்கே அணியிடம் தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

  • Oct 06, 2024, 13:37 PM IST

IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலம் இந்தாண்டு இறுதிக்குள் நடைபெற வாய்ப்புள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது மெகா ஏலம் மீது உள்ளது.

 

 

1 /8

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. 18ஆவது ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் (IPL Mega Auction) நடைபெற உள்ளது.     

2 /8

இந்த மெகா ஏலத்தின் விதிகள் மற்றும் வீரர்களை தக்கவைக்கும் விதிகள் கடந்த சில நாள்கள் முன் வெளியிடப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்கவைக்கலாம். அதுவும் ஏலத்திற்கு முன்னரும் தக்கவைக்கலாம், ஏலத்தில் RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம்.     

3 /8

அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆண்டுகள் விளையாடாத இந்தியர்கள் Uncapped வீரர்களாக கருதப்படுவர். ஒரு அணி கண்டிப்பாக ஒரு Uncapped வீரரை தக்கவைக்க வேண்டும். ஏலத்திற்கு முன் குறைந்தபட்சம் ரூ. 4 கோடி கொடுத்தும் தக்கவைக்கலாம் அல்லது RTM பயன்படுத்தியும் தக்கவைக்கலாம்.     

4 /8

அந்த வகையில், இந்த விதியின் கீழ் சிஎஸ்கே அணி தோனியை (MS Dhoni) ரூ.4 கோடிக்கு தக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. தோனி கடைசியாக இந்த 2025 சீசனில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 /8

இந்நிலையில், தோனி 2025 சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. தோனி தனது முடிவு இன்னும் அணி நிர்வாகத்திடம் அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அக். 31ஆம் தேதிக்குள் வீரர்களை தக்கவைக்கும் பட்டியலை அணிகள் அறிவிக்க வேண்டும் என்பதால் அதற்கு முன் தோனி தனது முடிவை அறிவிப்பாபர் என தெரிகிறது.       

6 /8

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தோனி வரும் சீசனில் விளையாடுவது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. அணியின் முக்கிய நிர்வாகிகள் இறுதிமுடிவை எடுக்கும் முன் தோனியை சந்திக்க உள்ளனர். இந்த அக்டோபர் மாதத்தின்  இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் ஒருநாள் மும்பையில் சிஎஸ்கே நிர்வாகிகளை தோனி சந்தித்து, தனது இறுதி முடிவை அறிவிப்பார்" என கூறப்படுகிறது.    

7 /8

தோனி இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் இரண்டு சீசன்களை தவிர மொத்தம் 15 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், 2016, 2017 ஆண்டுகளில் தடை காரணமாக அவர் ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வந்தார்.     

8 /8

தோனி கேப்டன்ஸியில் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் கோப்பையையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.