CSK, MS Dhoni | ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது குறித்து எம்எஸ் தோனி சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ் கொடுத்துள்ளார்.
Dhoni IPL 2025 Updates | ஐபிஎல் 2025 தொடரில் தோனி விளையாடுவாரா? இல்லையா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒருவழியாக குட் நியூஸ் கிடைத்திருக்கிறது.
ஐபிஎல் 2025 தொடரின் ஏலத்தைவிட பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது இந்த சீசனில் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது தான். இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.
அண்மையில் பேசிய சிஎஸ்கே அணியின் இயக்குநர் விஸ்வநாதன் கூட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்து தோனி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
அவர் ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது குறித்து அணி நிர்வாகத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களில் தெரிவிக்க இருப்பதாகவும், தோனி என்ன முடிவெடுக்கிறார் என்பதை அதன்பிறகு சிஎஸ்கே அறிவிக்கும் என கூறியிருந்தார்.
அந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது தோனி ஐபிஎல் 2025 தொடரில் விளையாட உள்ளார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் தக்க வைக்க இருக்கிறது.
முதல் ரீட்டென்ஷன் ஜடேஜா, அடுத்த ரீட்டென்ஷன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மூன்றாவது ரீட்டென்ஷ்ன் மதீஷ பத்திரனா. அன்கேப்டு பிளேயராக தோனியை தக்க வைக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த தகவல் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஒருவேளை ஐபிஎல் நிர்வாகம் இந்த ஆண்டு அன்கேப்டு பிளேயர் விதிமுறையை கொண்டு வராமல் இருந்திருந்தால் தோனி ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவது சந்தேகமாக இருந்திருக்கும். வலுக்கட்டாயமாக ஓய்வை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்.
ஏனென்றால் ஏலத்துக்கு வந்து வேறொரு அணி அவரை ஏலம் எடுக்க தோனி விரும்பமாட்டார். அதனால் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்றிருப்பார். நல்லவேளையாக அந்த விதிமுறை இந்த ஆண்டு வந்ததால் தோனி ஐபிஎல் 2025 விளையாட உள்ளார்.
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து அந்த அணி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. அன்கேப்டு பிளேயராக தோனி இருந்தால் அவருக்கு ஊதியமாக வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக தனக்கு வாய்ப்பளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொகையை ஒப்புக்கொண்டு விளையாட இருக்கிறார் அவர்.