Must Do Things When You Are At Home During Rainy Season : மழைக்காலத்தில் எங்கும் வெளியில் செல்ல முடியாததால் நம்மில் பலர் வீட்டிலேயே மாட்டிக்கொள்வோம். அந்த சமயத்தில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?
Must Do Things When You Are At Home During Rainy Season : அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நிரூபிக்கும் வகையில், தற்போது சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கனமழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு சிலர், இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் போர் அடிக்குமே என யோசித்து கொண்டிருக்கின்றனர். அவர்கள், வீட்டில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?
புத்தகம் படிப்பது: ஒரு நாவலில் மூழ்குங்கள் முயற்சி செய்யுங்கள். அல்லது புதிய வகை புத்தகத்தை படிக்கலாம். மழையின் சத்தம் உங்கள் வாசிப்பை இன்னும் அழகாக்கும்.
படம் அல்லது சீரீஸ் பார்ப்பது: நீண்ட நாட்களாக பார்க்க விரும்பிய படம் அல்லது தொடரை பாருங்கள். இது, உங்கள் பொழுதை ஜாலியாக கழிக்க உதவும்.
சமையல் அல்லது பேக்கிங் செய்வது: உங்களுக்கு பிடித்தத்தை, பிடித்தவர்களுடன் செய்து மகிழுங்கள். அடுப்பில் இருக்கும் சூடு, வெளியில் இருந்து வரும் ஜில்லென்ற உணர்வை குறைக்க உதவும்.
விளையாட்டு: ஜிக்சா புதிர் விளையாட்டுகள், போர்டு கேம்கள் அல்லது வீடியோ கேம்கள் மூலம் உங்கள் பொழுதை போக்கலாம்.
கைவினை பொருட்கள்: பெயிண்டிங் செய்வது, கூடை பின்னுவது, எதையாவது உருவாக்குவது போன்ற வேலைகளில் உங்களை நீங்களே ஈடுப்படுத்தி கொள்ளலாம்.
சுத்தம் செய்தல்: நீங்கள் இருக்கும் இடத்தை, டேபிளை, அலமாரியை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தி வைக்கலாம்.
தியானம்: இந்த பிசியான காலச்சூழலில் நம்மில் பலர் தியானம் செய்ய, நம்முடன் பேசிக்கொள்ள மறந்து விடுகிறோம். வீட்டில் இருக்கும் சமயத்தில் இதை செய்து உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம்.
நண்பர்கள்/குடும்பத்தினருடன் பேசுதல்: உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கலாம். இதனால், நீங்கள் உங்களுக்குள் இருக்கும் உறவை ஆழமாக்க முடியும்.