பெற்றோரின் விளையாட்டின் மீதான மோகம் அப்பாவி குழந்தையை கொல்லும் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஆம், இது ஸ்காட்லாந்தில் ஒரு தம்பதி இரவில் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும், மொபைலில் கேம்ஸ் விளையாடுவதிலும் மூழ்கி இருந்ததால், 19 மாத மகள் இறந்ததை கூட அறியாமல் இருந்துள்ளனர்.
இறந்த குழந்தையின் பெயர் கியாரா கான்ராய். விசாரணையில், இரவு முழுவதும் டிவி பார்த்து விளையாடி கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்கவேயில்லை என்பது, தி மிரரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (File photo/courtesy Airdrie & Coatbridge Advertiser)
இறந்து போன அப்பாவி குழந்தையின் தந்தையை ஸ்காட்லாந்தின் நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது. குழந்தையின் தாயார் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் நீதிமன்றம் அவரை விடுவித்தது. (File photo/courtesy Airdrie & Coatbridge Advertiser)
இறந்த குழந்தை மூன்று நாட்கள் பசியுடன் இருந்தாள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தவிர, அந்த குழந்தை வீட்டில் நீண்ட நேரம் தனியாக இருந்துள்ளது.
குழந்தையின் தான் தற்போது தனது மகளின் மரணத்தால் மிகவும் வருந்துவதாக கூறினாலும், அவரது மோசமான விளையாட்டு மற்றும் டிவி போதை காரணமாக, தனது குழந்தை இறக்க காரணமாக இருந்துள்ளார்.
எனினும், சம்பவத்தன்று காலையில் குழந்தைக்கு பால் கொடுத்ததாக இறந்த குழந்தையின் தாய் கூறுகிறார். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.