இனி ஒரே ஒரு நுழைவுத் தேர்வை எழுதினால் போதும், 2021-ல் மாறுகிறது இந்த முக்கிய விதி: விவரம் உள்ளே

NEP 2020 உயர் கல்வியில் திருத்தங்கள்: உயர்கல்வி செயலாளர் அமித் கரே ஒரு மெய்நிகர் கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் சில பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று கூறியுள்ளார். 2021, புத்தாண்டின் துவக்கம், கல்வித் துறையைப் பொறுத்தவரை ஒரு புதிய அத்தியாயமாய் இருக்கப் போகின்றது. ஏனெனில் இந்த முறை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான பாதை மிகவும் எளிதாக இருக்கும். 

புதிய வழிமுறைகளின் காரணமாக மாணவர்கள் ஒரே நுழைவுத் தேர்வை எழுதி எந்தவொரு மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர முடியும். புதிய கல்விக் கொள்கையை நோக்கிய பாதையில் மற்றொரு முக்கிய அடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1 /4

உயர்கல்வி செயலாளர் அமித் கரே, FICCI ஏற்பாடு செய்த ஒரு மெய்நிகர் கூட்டத்தில், '2021 இல் சில பெரிய மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு, கிரெடிட் வங்கியின் உருவாக்கம் ஆகியவை இதில் அடங்கும். கிரெடிட் வங்கியில் மாணவர்கள் தங்கள் அகாடமிக் கிரெடிட்டை பாதுகாத்து வைக்கலாம்’ என்று கூறினார்.

2 /4

2021 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் குறித்த விவரங்களை அளித்த அவர், 'பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் (NCTE) போன்ற அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டும்.’ என்றார். நாட்டில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க, ஒரு தேசிய ஆராய்ச்சி நிதியும் உருவாக்கப்படும்.

3 /4

கரே கூறுகையில், 'அனைத்து தனியார், மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களும் காம்படீடிவ் ஃபண்டிங்கைக் கொண்டிருக்கலாம். இது அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை போன்றது. நாங்கள் இன்னும் சிலவற்றை இதில் சேர்த்துள்ளோம். சமூக அறிவியலும் தேசிய ஆராய்ச்சி நிதியத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.’ என்றார்.

4 /4

மருத்துவ மற்றும் சட்டக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் இந்திய உயர் கல்வி ஆணையம் (HECI) அமைக்கப்படும். ஏஜென்சியின் படி, இந்த மாற்றங்கள் 2021 முதல் செயல்படுத்தப்படும்.