Airtel பயனர்களுக்கு அதிரடியான offer: இப்படி recharge செய்தால் கிடைக்கும் 50% cashback!!

பண்டிகை காலங்களில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர எந்த வாய்ப்பையும் விடுவதில்லை. குறிப்பாக ப்ரீபெய்ட் பயனர்களுக்கு Airtel, Vi மற்றும் Jio ஆகியவை ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு பல திட்டங்களை கொண்டு வருகின்றன.

Airtel தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைக்கு, ஏர்டெல் பயனர்கள் அமேசான் செயலியின் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகையின் பயனை ஏர்டெல்லின் செயலி அல்லது ஏர்டெல்லின் வலைத்தளத்திலிருந்து ரீசார்ஜ் செய்தால் பெற முடியாது. இந்த சிறப்புத் திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்….

1 /4

Airtel புதிய ஆஃபரில், பயனர்களுக்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜில் 50 சதவீதம் கேஷ்பேக் வழங்குகிறது. ஆனால் இந்த சலுகையைத் தவிர, ஏர்டெல் பல புதிய திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹை ஸ்பீட் டேட்டா கிடைப்பதுடன் அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவசமாக அழைப்புக்கான வசதியும் கிடைக்கிறது. இருப்பினும், கேஷ்பேக் சலுகையின் பலனைப் பெற, பயனர்கள் அமேசான்-பே உதவியுடன் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

2 /4

ஏர்டெல்லின் இந்த கேஷ்பேக் சலுகை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். எங்கள் இணை வலைத்தளமான BGR.in இன் படி, ஏர்டெல் பயனர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள, அமேசான் இந்தியா செயலியின் உதவியுடன் amazon-pay மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். Amazon-ல் ரீசார்ஜ் செய்தால், ஏர்டெல் பயனர்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜில் அதிகபட்சமாக 50 சதவீதம் கேஷ்பேக் அல்லது ரூ .40 வரையிலான கேஷ்பேக்கை பெறுவார்கள்.

3 /4

ஏர்டெல்லின் இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும். ஏர்டெல் பயனர்கள் அக்டோபர் 30 வரை மட்டுமே இந்த சலுகையின் பயனைப் பெற முடியும். இந்த சலுகைக்கு கேஷ்பேக் ரிவார்ட் சேகரிக்கப்பட வேண்டும். இந்த சலுகைக்கு, ஏர்டெல் பயனர்கள் அமேசான் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல்லின் செயலி அல்லது ஏர்டெல்லின் வலைத்தளத்திலிருந்து ரீசார்ஜ் செய்தால் இந்த சலுகையின் பயன் கிடைக்காது

4 /4

Jio-வின் வலைத்தளத்தின் FAQ பக்கத்தின்படி, Disney+Hotstar Premium மெம்பர்ஷிப்பை நிறுவனம் விரைவில் தன் பயனர்களுக்கு வழங்கக்கூடும். இருப்பினும், வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் பகிரப்படவில்லை. Jio மற்றும் Disney+Hotstar-ம் இது தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் கொடுக்கவில்லை. Disney+Hotstar Premium Subscription மாதத்திற்கு ரூ .299 க்கும், வருடத்திற்கு ரூ .1499 க்கும் கிடைக்கிறது.