ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர பறவைகளாக சுற்றித் திரிந்தனர். தலிபான் ஆட்சிக்கு முன், நவநாகரீக மங்கைகளாக தோன்றும் ஆப்கானிஸ்தான் பெண்களின் இந்த படங்கள் வைரலாகி வருகிறது:
பல நூற்றாண்டுகளாக உள்நாட்டு மோதல்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடுகள் அதிகரித்து, 1950 கள் மற்றும் 1960 களில், சில மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு, மேற்கத்திய வாழ்க்கை முறையை நோக்கி நாடு சென்றது. அதே நேரத்தில் பழமைவாத பிரிவுகளுக்கும் மரியாதை இருந்தது. (புகைப்படம்: ட்விட்டர்)
ஆப்கானிஸ்தான் அரசு, பெண்கள் பள்ளிகளை நிறுவியது, ஒரு புதிய பல்கலைக்கழகத்திற்கு நிதியளித்தது, பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய அரசியலமைப்பில், ஆப்கான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. நகர்ப்புறங்களில் பெண்கள் கல்லூரியில் படித்தார்கள், வியாபாரங்களை நடத்தினர், பனியில் இருந்தனர். மேலும் சிலர் அரசியலுக்கு வந்தனர். காபூல் நாகரீக நகரமாக இருந்தது. (புகைப்படம்: Instagram)
ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக நடுநிலை நாடாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையிலான பனிப்போரின் போது கொடுக்கப்பட்ட இரு நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மற்றும் அமெரிக்க நிதி உதவிகளை ஏற்றுக்கொண்டது. அமைதியான நாடாக இருந்த ஆப்கானிஸ்தானில், பழைய பாரம்பரிய மண் கட்டமைப்புகளுடன் காபூலில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டபோது, புர்கா அணிவது கட்டாயமானதாக இல்லை. மேலும் நாடு மிகவும் திறந்த, வளமான சமுதாயத்தை நோக்கிய பாதையில் தோன்றியது. (புகைப்படம்: ட்விட்டர்)
இந்த புகைப்படன் 1962 ஆம் ஆண்டில் காபூலில் உள்ள மருத்துவ துறையின் இரண்டு ஆப்கானிஸ்தான் மருத்துவ மாணவர்கள் தங்கள் பேராசிரியரிடம் (வலதுபுறம்) பேசும் படம் இது. ஆனால், 1970 களின் பிற்பகுதியில், மேற்கத்திய நாடுகளில் பெண்கள் இயக்கம் வலுப்பெற்ற போதும், ஆப்கானில் பெண்கம் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டது. (புகைப்படம்: AFP)
தலிபான்கள் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை முதன்முதலில் ஆட்சி செய்தபோது, ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டம் மிருகத்தனமாக அமல்படுத்தப்பட்டது. பெண்கள் வேலை செய்ய முடியாது என்றும் பெண்கள் பள்ளியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. புர்கா அணியாமல் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. விதிகளை மீறுபவர்கள் தாலிபான்கள் பொது இடத்தில் கல்லாம் அடித்து கொல்லப்பட்டனர். அல்லது தீ வைக்கப்பட்டனர். அல்லது கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)