Rahu Saturn Conjunction: மீனத்தில் ராகுவும், சனியும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பணவரவு திடீரென அதிகரிக்கும். அந்த 3 ராசிகளை இங்கு காணலாம்.
Rahu Saturn Conjunction In Pisces: நிழல் கிரகமான ராகு மீனத்தில் தற்போது வீற்றிருக்கிறார். நீதி பகவானாக அறியப்படும் சனி கிரகம் வரும் மார்ச் 29ஆம் தேதி மீனத்தில் பெயர்ச்சி ஆகிறது. மீனத்தில் ராகுவும், சனி பகவானும் (Shani) இணைவதால் பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
ஜோதிடத்தின்படி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கிரகங்கள் பெயர்ச்சி ஆகும். கிரக பெயர்ச்சிகள் சிலருக்கு சாதகமாகவும் அமையும், பாதகமாகவும் அமையும் எனலாம்.
கிரகப் பெயர்ச்சிகளின் போது இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் சங்கமிப்பதும் நடக்கும். ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதும் 12 ராசிக்காரர்களின் வாழ்வில் தாக்கத்தை உண்டு பண்ணும்.
அந்த வகையில், தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு, சனியும் (Lord Saturn), ராகுவும் இணைய உள்ளன. ராகு (Rahu) தற்போது மீனத்தில் உள்ளார். வரும் மார்ச் 29ஆம் தேதி மீனத்தில் சனி பகவானும் (Saturn Transit) பெயர்ச்சி ஆகிறார்.
மீனத்தில் (Pisces) இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இணைவு பல ராசிகளுக்கு லாபகரமான காலகட்டமாகவும். அப்படியிருக்க இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் திடீர் பண வரவு அதிகமாகும். அந்த 3 ராசிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
கும்பம் (Aquarius): உங்களின் தகவல்தொடர்பு இந்த காலகட்டத்தில் சிறப்பானதாக மாறும். இதனால் பலரின் கவனமும் உங்கள் மீது திரும்பும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த பேச்சுத் திறனின் மூலமே பெரிய பொறுப்புகள் தேடி வரலாம். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைக்கூடும் காலகட்டம் இது. குழந்தைப் பேறு குறித்த நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு (Sagittarius): நிலம், வீடு, கடைகள் போன்ற ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் சார்ந்த பண வரவு அதிகமாகும். ராகு மற்றும் சனி பகவானின் அருளால் உங்கள் மீது பண மழை பொழியும். நிலம் அல்லது புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உடனான உறவும் பலமாகும்.
மிதுனம் (Gemini): பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதேநேரத்தில் வருமானமும் அதிகரிக்கும். தொழில்நடத்துபவர்களுக்கும் நல்ல வருமானம் வரும், தொழிலை விரிவுப்படுத்தலாம். பெற்றோரின் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.