Ratan Tata success tips : வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்பட தொழில் உலகின் ஜாம்பவான் கூறிய வார்த்தைகள் இவை தான்
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும் என ரத்தன் டாடா கூறிய பொன் மொழிகள்
வாழ்க்கை ஒரு கேமரா போன்றது. நல்ல விஷயங்களை படம்பிடித்துக் கொள்ளுங்கள். நெகடிவ்களில் இருந்து உங்களை வளர்த்து கொள்ளுங்கள். ஒரு ஷாட் ஒர்க் ஆக வில்லை என்றால் அடுத்த ஷாட் எடுக்கவும்
வாழ்க்கையில் வெற்றி என்பதே ரிஸ்க் எடுக்கும்போது தான் வரும். எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கும் ஒருவருக்கு தோல்வி என்பது கேரண்டி. ஆனால் முயற்சி செய்பவருக்கு மட்டுமே வெற்றி என்ற ஒன்று கிடைக்கும்
உங்களுக்கு கிடைக்கும் மரியாதை என்பது உங்களிடம் இருக்கும் பணத்தால் அளவிடப்படாது. நீங்கள் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே அளவிடப்படும்.
வெற்றி வேண்டும் என நினைப்பவர்கள் எப்போதும் தோல்வியை பற்றி கவலைப்படவே கூடாது. தோல்வி இல்லாமல் ஒருவர் வெற்றியும் பெற முடியாது. அதனால் வெற்றி பெற வேண்டும் என்று மட்டும் முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறும் வரை முயற்சி செய்யுங்கள். வெற்றி கிடைக்கும்
வாழ்க்கையில் எப்போதும் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஏற்றம் இறக்கம் இல்லாத வாழ்க்கை எந்தவொரு அர்த்தத்தையும் கற்பிக்காது. உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கிறதா என எடுக்கப்படும் ECG கூட ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்தால் இறந்துவிட்டீர்கள் என சொல்லிவிடுவார்கள்
வேகமாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களிடையே போட்டியை உருவாக்கி, கடைசியில் ஈகோவில் கொண்டு நிறுத்தும். மெதுவான வெற்றி உங்களை மதிப்புமிக்கதாக மாற்றும்.
எப்போதும் உங்கள் உழைப்பு மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நேரத்தை உங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தி பழங்குங்கள். உங்களுக்கு தேவை என்ன என்பதை அறிந்து அதற்காக உழைத்தீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
பல்வேறு காலகட்டங்களில் ரத்தன் டாடா வாழ்க்கை பற்றிய தன்னுடைய அபிப்ராயங்களை இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.