Rose Water: ரோஸ் வாட்டர் அழகு குறிப்புகள்; முக்கிய டிப்ஸ் இதோ

பன்னீர் எனப்படுவது ரோஜாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் ஆகும். உண்மையில், பன்னீரானது நறுமணத் தேவைகளுக்காக உரோசா எண்ணெய் எடுக்கப்படும் போது தோன்றும் பக்க விளைபொருள் ஆகும். இது உணவுப் பொருட்களை மணமூட்டவும், சில அழகுசாதன மற்றும் மருத்துவப் பொருட்களின் பகுதியாகவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சமய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரோஸ் வாட்டர் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் ஆகும். இந்த ரோஸ் வாட்டரில் பல பயன்கள் அடங்கியுள்ளது. இதனால் ரோஸ் வாட்டர் நமது சாருமத்திற்க்கு எவ்வாறு பயன் தருகிறது என்று பார்போம்.,

1 /4

முகப்பருக்கள் மறைய செய்யும்: ஒரு ஸ்பூன் கிராம்பு தூளில் ஒரு ஸ்பூன் ரேஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்கும் போது முகத்தில் உள்ள பருக்களின் மீது அப்ளை செய்தால் சருமத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். இந்த செயல் முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர வேண்டும். 

2 /4

டல் ஸ்கின்: ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து வந்தால் ஆன்டி பாக்டீரியா சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவும்.

3 /4

சரும கருமை நீங்கும்: ஒரு ஸ்பூன் பயத்தமாவு மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

4 /4

ட்ரை கூந்தல்: இரண்டு ஸ்பூன் கிளிசெரின் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கூந்தல் மற்றும் கூந்தலின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து வந்தால் கூந்தல் மிகவும் மென்மையாக காணப்படும்.