பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு புதிய SIP திட்டத்தை தொடங்கியுள்ளது, இதில் நீங்கள் வெறும் 250 ரூபாயில் தொடங்கலாம். மாதம் சேமிப்பின் மூலம் நீங்கள் ரூ. 78 லட்சத்திற்கும் அதிகமான நிதியை திரட்டலாம். அதன் முழு கணக்கீட்டை புரிந்து கொள்வோம்...
Investment Tips: சரியான இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெறுவதன் மூலம், சிறிய சேமிப்பின் மூலமும் பெரும் நிதியைத் திரட்ட முடியும் என்றும், இந்த விஷயத்தில், முறையான முதலீட்டுத் திட்டம் அதாவது எஸ்ஐபி மிகவும் பிரபலமாகி வருகிறது.
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இணைந்து தொடங்கியுள்ள ஜன் நிவேஷ் எஸ்ஐபி திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், முதலீட்டாளர்கள் வெறும் 250 ரூபாயில் தொடங்கி தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர முதலீட்டு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
எஸ்பிஐயின் ஜன் நிவேஷ் எஸ்ஐபி திட்டத்தில், முதலீட்டாளர்கள் முதலில் எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம், இது நிதி மேலாளர்களால் பங்கு மற்றும் கடனுக்கு இடையேயான முதலீடுகளை மூலோபாய ரீதியாக ஒதுக்கும் ஒரு ஃபண்டாகும்.
எஸ்ஐபி என்னும் நீண்ட கால முதலீட்டில், முதலீட்டாளர்கள் 12 -16 சதவீதம் வரை வருமானம் பெறலாம். இந்நிலையில், ரூ.250 மாதாந்திர எஸ்ஐபியை 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், கிடைக்கும் வருமானத்தை அறிந்து கொள்ளலாம்.
30 ஆண்டு கால தொடர் முதலீட்டில் 15 சதவீதம் வருமானம் கிடைத்தால், முதலீட்டாளர் ரூ.17.30 லட்சத்தை சேர்த்திருப்பார். இதில் செய்யப்படும் மொத்த முதலீட்டுத் தொகை ₹90,000 மட்டுமே. ஆனால், கிடைத்த வருமானம் ரூ.16,62,455.
முதலீட்டாளர் இந்த சிறிய அளவிலான SIP திட்டத்தில் தனது முதலீட்டு காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து 40 ஆண்டுகளாக உயர்த்தினால், அவருக்கு கிடைக்கும் தொகை வியக்கத்தக்க அளவில் ரூ.78 லட்சத்திற்கும் அதிகமானதாக இருக்கும்.
வருமானம் ரூ.77,30,939: ஒவ்வொரு மாதமும் 250 ரூபாயை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, வந்தால், அவருடைய வைப்புத்தொகை ரூ. 1.20 லட்சமாக இருக்கும், ஆனால் கூட்டு வருமானத்தின் பலனால், அவர் பெறும் வருமானம் ரூ.77,30,939 ஆக அதிகரித்து மொத்த நிதி ரூ.78,50,939 ஆக பெருகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.