குரு - சுக்கிரனின் ஷடாஷ்டக யோகம்! பாடாய் படப்போகும் ‘சில’ ராசிகள்!

குரு மற்றும் சுக்கிரனின் ஷடாஷ்டக யோகம் ஜனவரி 3ஆம் தேதி உருவாக உள்ளது. இந்த யோகம் சில ராசிக்காரர்களை பாடாய் படுத்தும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

குரு சுக்ரனின் நிலையினால் ஏற்படும் ஷடாஷ்டக் யோக பலன்கள்: ஆடம்பரம், செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமான கிரகமான சுக்கிரனுக்கும் குரு பகவானுக்கும் இடையில் ஷடாஷ்டக் யோகம் உருவாகப் போகிறது. 

1 /6

அறிவு மற்றும் செல்வத்திற்கு காரணமான கிரகங்களான குரு மற்றும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் 6 மற்றும் 8 வது வீட்டை நோக்குவார்கள்.  குரு மற்றும் சுக்கிரனின் இந்த நிலையிலான ஏற்படும் ஷடாஷ்டக யோகத்தின் போது எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /6

ஷடாஷ்டக யோகம் மேஷ ராசிக்கு கெடு பலனைத் தரும். இந்த அசுப யோகத்தின் பலனால் மேஷ ராசிக்காரர்களுக்கு உடல் நலம் கெடலாம். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல் நலனில் அக்கறை இருக்கும். வியாபாரம் செய்யும் மேஷ ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் குறிப்பாக,  பேச்சிலும் செயலிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

3 /6

குரு-சுக்கிரனின் இந்த ஷடாஷ்டக யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல.  இந்த யோக பலன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமாகாதவர்கள் காதல் வாழ்க்கையில் இருந்தால், அவர்களும் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் நிலைமை நெருக்கடியாக இருக்கலாம். வியாபாரத்தில் லாபம் குறைவதைக் காணலாம்.

4 /6

மீன ராசிகள் ஷடாஷ்டக யோகத்தில் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரன் மற்றும் குருவின் இந்த ஷடாஷ்டக யோகம் வேலையில் தடைகளை உருவாக்கும். பயணத்தின் போது குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். உறவினருடன் மனக்கசப்பு வரலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். பணியிடத்திலும் வேலை தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

5 /6

ஷடாஷ்டக் யோகம் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் பார்க்கும்போது உருவாகிறது. ஷடாஷ்டக் யோகம் ஜோதிடத்தில் சுப யோகமாக கருதப்படவில்லை. ஷடாஷ்டக் யோகம் கெடுபலன்களை கொடுக்கின்றன. பல நேரங்களில் இந்த யோகம் உடல், மன மற்றும் நிதி நிலைகளை பாதிக்கிறது.

6 /6

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது