உணவு முறை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, மூட்டு வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற வலிகளுக்கு மருந்து உட்கொள்வது நிவாரணம் கிடைக்கும் என்றாலும், அதற்கு பக்க விளைவுகளும் உள்ளன. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மூட்டு வலிகளுக்கு மருந்து உட்கொள்வது நிவாரணம் கிடைக்கும் என்றாலும், அதற்கு பக்க விளைவுகளும் உள்ளன. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மூட்டு வலி பிரச்சனை தீவிரமாக உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை கூட பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும். அதனால் உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்து ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மூட்டு வலியில் இருந்து நிறைய நிவாரணம் பெறலாம். எனவே மூட்டு, முழங்கால் வலியில் இருந்து விடுபட டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ள பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம் உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இஞ்சி மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறது. இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்.
நம் உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினால், அது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், அது உடலுக்கு நன்மை பயக்கும். இது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். எனவே, முழங்கால் வலிக்கு வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தயம் முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. வெந்தயப் பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளவும்.
துளசி கீல்வாதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. முழங்கால் வலியில் நிவாரணம் பெற துளசி டீயை ஒரு நாளுக்கு 3-4 முறை அருந்தலாம்.
மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் பெற, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் மீனும் சாப்பிடலாம். இதிலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலம் மற்றும் விட்டமின் டி வியக்கத்தக்க பலன்களை கொடுக்கும்.
சூரிய ஒளி உடலில் பட்டாலே, மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். மூட்டுகள் வலுவாக இருக்க, வைட்டமின் டி அவசியம் தேவை. அதனால் தான் தினமும் சிறிது நேரம் வெயிலில் உட்காருங்கள். மாத்திரைகள் மூலம் விட்டமின் டி எடுத்துக் கொண்டாலும், சூரிய ஒளி மிகச்சிறந்த தேர்வாகும்.
மூட்டு வலி அதிகம் இருந்தால், உணவு பழக்கத்தை சிறிது மாற்றுவதுடன், நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளும் செய்ய வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் வீட்டிலேயே சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகளை மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் எந்த வகையான பக்க விளைவுகள் அல்லது பாதிப்புகளை தவிர்க்கலாம்.