தீபாவளி விழாவில் மூத்த செய்தியாளர்களை கவுரவித்த அமைச்சர்!

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி விழாவில் பங்கேற்ற ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அமைச்சர்! மேலும் படிப்போம்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அமைச்சர், லப்பர் பந்து படத்தின் ஹிரோ ஹரிஷ் கல்யாண் மற்றும் பத்திரிகை துறையின் மூத்த நிருபரான திரு கங்காதரன் அவர்களுக்கு சங்கம் சார்பில்  நினைவு பரிசு மற்றும் காசோலை கொடுத்து கௌரவிப்பு. மேலும் படிப்போம்.

1 /8

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்' என வாழ்த்தினார் .

2 /8

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் திரு.மதிவேந்தன் அவர்கள் மற்றும் இந்த வருடத்தின் மிக பெரிய வெற்றி பெற்ற லப்பர் பந்து பட ஹீரோ ஹரிஷ் கல்யாண் இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

3 /8

இந்த நிகழ்வில், மூத்த பத்திகையாளர்கள் , கங்காதரன், தேவி மணி, திரை நீதி செல்வம் ஆகியோருக்கு பாராட்டும் பரிசும் வழங்கபட்டது .

4 /8

பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழை மாண்புமிகு அமைச்சர், திரு மதிவேந்தன் அவர்கள் வெளியிட நடிகர் ஹரிஷ் கல்யாண் பெற்றுக் கொண்டார். 

5 /8

நடிகர் ஹரிஷ் கல்யாண் : சமூகத்தின் மிகப்பெரும் தூண் நீங்கள் தான். பல மூத்த அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை இன்று நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கங்காதரன் சாரை இன்று நேரில் சந்தித்தது மட்டுமின்றி அவரை கௌரவிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக நினைக்கிறேன். 

6 /8

அமைச்சர்  டாக்டர் திரு மதிவேந்தன் : பத்திரிகையாளர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல வெயில், மழை எதையும் பாராமல் கொரோனா  போன்ற உயிருக்கே ஆபத்தான நிலையிலும் கூட தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்கள் என்று கூறினார்.

7 /8

அமைச்சர்  டாக்டர் திரு மதிவேந்தன்: கழகத் தலைவர் கலைஞர் ஐயா எப்போதும் தன்னை கழகத்தின் தலைவர் என்பதற்கு முன், தன்னை முதலில் பத்திரிகையாளர் என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார். அவர் வழித்தோன்றல்களான நாங்களும் நிச்சயம் பத்திரிக்கையாளர்களுக்கு முதலிடம் கொடுப்போம் எனவும் கூறினார்.

8 /8

நிகழ்ச்சியின் நிறைவாக சங்க உறுப்பினர்களுக்கு  நல்லெண்ணை முதல் ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரை 8 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத்தொகுப்பு கொடுக்கப்பட்டு , இரவு உணவோடு விழா இனிதே நிறைவுற்றது.