கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்களுக்கு ஒரு சூப்பரான குட்நியூஸ், தை மாதம் ரூ.2000 கிடைக்கப்போகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் தை மாதம் பொங்கல் பரிசு (Pongal Gift) தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் பெறும் அரிய வாய்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /9

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கான காரணம் இறப்பு, பொருளாதார வரம்பு உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு தகுதியற்ற பயனாளிகளை தமிழ்நாடு அரசு நீக்கியிருக்கிறது.

2 /9

விரைவில் புதிய பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட இருக்கின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி முடித்தவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. 

3 /9

இதனால் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தங்களின் விண்ணப்ப நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் ஆன்லைனிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

4 /9

இது ஒருபுறம் இருக்க கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கும் மகளிருக்கு ஒரு சூப்பரான குட்நியூஸ் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜனவரி மாதம், அதாவது தைப் பொங்கல் கொண்டாடுவதற்கு முன்பாக 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது. 

5 /9

ஏனென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் அவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் நிதியும் கிடைக்கும். 

6 /9

இதனால் ஒரே மாதத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டு பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்போகிறது. இதில் சில கண்டிஷன்களும் இருக்கின்றன. யார் யாருக்கு 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும், யார் யாருக்கு 2ஆயிரம் ரூபாய் கிடைக்காது, யாருக்கு இரண்டு திட்டங்களிலும் பலன் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

7 /9

பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து வகையான அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது. அந்தவகையில் பார்க்கும்போது அரிசி ரேஷன் அட்டை வைத்திருப்பவராக இருந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக இருந்தால் மட்டுமே ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு கொடுக்கும் 2 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 

8 /9

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான கிராம பெண்கள் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ரூபாய் பெறப்போகிறார்கள். ஒரே மாதத்தில் தலா ஆயிரம் ரூபாய் தொகையை இரண்டு வெவ்வேறு திட்டங்களில் கொடுக்க இருக்கிறது தமிழ்நாடு அரசு. 

9 /9

கலைஞர் உரிமைத் தொகை பணம் நேரடியாக வங்கி கணக்குகளிலும், தைப்பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் நேரடியாக பயனாளியிடமும் வழங்கப்படும். இதுதான் அந்த குட்நியூஸ்...!